பாலிவுட் vs கிரிக்கெட்: ஆதியா ஷெட்டி கே.எல்.ராகுலுடன் டேட்டிங் செய்கிறாரா..?

பாலிவுட் நடிகை ஆதியா மற்றும் கிரிக்கெட்டர் கே.எல்.ராகுல் ஆகியோரின் தொடர்பு பற்றி சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 30, 2019, 05:58 PM IST
பாலிவுட் vs கிரிக்கெட்: ஆதியா ஷெட்டி கே.எல்.ராகுலுடன் டேட்டிங் செய்கிறாரா..?

புதுடெல்லி: கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. பெரும்பாலும், பாலிவுட் பிரபலங்களின் இதயம் கிரிக்கெட் வீரர்கள் மீது விழுவது பெரும்பாலும் நடந்துக்கொண்டு வருகிறது என்பது கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து கூறமுடியும். அந்த வகையில், தற்போது பாலிவுட் மற்றும் கிரிக்கெட் இடையே ஒரு புதிய உறவு ஏற்ப்பட்டு உள்ளது. இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் மற்றும் நடிகையான ஆதியா ஷெட்டி (Athiya Shetty) மற்றும் இந்திய அணியின் வீரர் கே.எல். ராகுலுக்கு (K. L. Rahul) இருக்கும் இணைப்பு வெளிவரும் செய்திகள் பெரும்பாலும் வதந்திகளாக தோன்றினாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதியா ஷெட்டி பதிவிட்ட கருத்துக்கு ஆடை வடிவமைப்பாளர் விக்ரம் பன்னவிஸ் பதில் அளித்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

முதலில் அர்ஜுன் கபூருடன் இணைத்து பேசப்பட்ட ஆதியா ஷெட்டி, தற்போது கிரிக்கெட் வீரர் கே.கே. எல் ராகுலுடன் டேட்டிங் செய்வதாக செய்திகள் வெளியாகி வருகிறது. முன்னதாக, கே.எல்.ராகுலின் பெயர் நடிகை நித்தி அகர்வாலுடன் (Nidhhi Agerwal) தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த அது உறுதிப்படுத்தப்பட வில்லை, ஆனால் இப்போது ஆதியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் தொடர்பு பற்றி சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

நேற்று (வியாழக்கிழமை,) ஆதியா தனது இன்ஸ்டாகிராமில், 'உங்கள் வாழ்க்கையின் நேரத்தை நம்புங்கள்' என்று பகிர்ந்துள்ளார். ஆத்தியாவின் இந்த கருத்து பற்றி பேஷன் டிசைனர் விக்ரம் பன்னவிஸ், 'இந்த நாட்களில் நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறீர்களா??? வாருங்கள் போகலாம் கே.எல்.-லிடம்?? ... கோலாலம்பூர் ??? என்று கூறியுள்ளார். அதற்கு பதில் கருத்து கூறிய ஆத்தியா "உங்களை பிளாக் பண்ண வேண்டும்" என்று கூறினார். இதற்கு விக்ரம், "நான் நடுவரிடம் புகார் கூறுவேன். ஒரு முறை உங்கள் விக்கெட் விழும்.... அவர் மீண்டும் பெவிலியனுக்கு திரும்புவார்". என பதில் கருத்து கூறியுள்ளார். 

Athiya Shetty

விக்ரம் ஃபட்னவிஸின் இந்த ட்வீட் மூலம், பல ரசிகர்கள் அதை ஆதியாவிற்கும் ராகுலுக்கும் இடையிலான உறவின் அறிவிப்பாக நினைத்து ஆதியாவை வாழ்த்தி வருகின்றனர். இதுக்குறித்து ஆதியா மட்டுமே விளக்கம் அளிக்க முடியும். முற்றுபுள்ளி வைக்கமுடியும்.