ஜெட் வேகத்தில் பாய்ந்து வந்த புலிக்கு டிமிக்கி கொடுத்த மான்; வைரல் வீடியோ

புலி ஒன்று ஜெட் வேகத்தில் ஓடி வந்து இரையாக வேட்டையாட முற்பட, சமயோசித்தமாக மான் ஒன்று தப்பித்து ஓடும் வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 12, 2023, 04:40 PM IST
ஜெட் வேகத்தில் பாய்ந்து வந்த புலிக்கு டிமிக்கி கொடுத்த மான்; வைரல் வீடியோ title=

புலி வேட்டையில் இருந்து தப்பிப்பது என்றால், அந்த விலங்குக்கு ஆயுசு கெட்டி என்று சொல்லலாம். ஏனென்றால் அந்தளவுக்கு குறி தவறாமல், இலக்கு தவறாமல் வேட்டையை சரியாக சொல்லி வைத்து பிடிக்கும் விலங்கு புலி. ஆனால், தமிழ் முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறார்கள் வல்லனுக்கும் வழுக்குப் பாறை உண்டு என. அதற்கு இந்த வீடியோவே சாட்சி. காட்டில் வேட்டையாட சென்ற இடத்தில் ஜெட் வேகத்தில் ஓடி மானை வேட்டையாட முற்பட்ட புலிக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. புலியின் பார்வையில் பார்த்தால் வேட்டையில் கொஞ்சம் ஏமாற்றம். ஆனால் மானின் பார்வையில் இருந்து பார்த்தால் அதற்கு மறுபிறவி.

மேலும் படிக்க | Viral Video: என்ன கொடுமை சார் இது... சிங்கங்களை ஓட விரட்டிய எருமை!

அந்த ஒரு நொடி சமயோசித்தமாக சிந்திக்காமல், வேகமாக ஓடாமல் ஏதேனும் சிறு தவறு செய்திருந்தால் கூட அந்த மானால் அப்போது உயிர் தப்பியிருக்க முடியாது. ஆனால், விதி கொஞ்சம் தூரத்தில் இருந்தது என்று நினைத்துக் கொள்ளலாம் அந்த மானுக்கு. புலி பாய்ச்சலில் துல்லியமாக தப்பித்து தன் உயிரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. புலி வேட்டையாடுவது அதற்கு நிர்பந்திக்கப்பட்ட ஒன்றுதான். வேட்டையாடினால் மட்டுமே அதற்கு உணவு. மானைப் பொறுத்தவரை புலி உள்ளிட்ட விலங்குகளின் வேட்டையில் இருந்து தப்பித்தால் மட்டுமே வாழ்வு. ஒரு சில நேரங்களில் மட்டுமே அந்த வாழ்வு அடுத்த அத்தியாயத்தை எட்டும்.

எப்போது என்றெல்லாம் கூற முடியாது. வாழ்வுக்கான ஆபத்துகள் வரும்வரை வாழ்நாள் முழுவதும் அவை இப்படி தப்பித்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி தப்பித்த ஓடிப்போன மானின் வீடியோ தான் இப்போது வீடியோ வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. Saket Badola IFS என்ற அதிகாரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புலியிடம் இருந்து மான் தப்பிக்கும் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.  14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரல் வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | முதலையிடம் தப்பித்து சிறுத்தையிடம் சிக்கிய மான் - பதறவைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News