உங்க மப்புக்கு நான்தான் ஊறுகாயா.. பாம்பை பதம் பார்த்த நபர்: வீடியோ வைரல்

அருகில் இருப்பவர்கள் அதை விட்டுவிடச் சொன்னால், அவர் அவர்களை நகரச் சொல்கிறார். பின்னர் பாம்பிடம் தன் கையைக் கடிக்கச் சொல்கிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 9, 2023, 05:11 PM IST
  • இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.
  • நபரை கொடூரமாக கடித்த விஷப் பாம்பு.
  • இன்றைய வைரல் வீடியோ.
உங்க மப்புக்கு நான்தான் ஊறுகாயா.. பாம்பை பதம் பார்த்த நபர்: வீடியோ வைரல் title=

இன்றைய பரபரப்பான உலகில், சமூக ஊடகங்கள் நம் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளையும், தகவல்களையும் வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம். 

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்பட்டாலும், அதன் மீது இருக்கும் சுவாரஸ்யம் குறைவதில்லை. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்தவகையில் சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | மடி மீது முதலை..கழுத்தில் பாம்பு..ஆபத்துடன் விளையாடும் சிறுவன்! வைரல் வீடியோ!

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் பயங்கர விபத்து ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு குடிபோதையில் ஒருவன் பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். தான் சிவனின் தந்தை என்று சுற்றியிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது தவிர, நான் மகாதேவனின் அவதாரம் என்று பாம்பிடம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தயார். "நீ என்னைக் கடித்துக் காட்டு" என்றும் கூறிக் கொண்டே இருந்தார். இதற்கிடையில் குடிகாரனின் கழுத்தில் பாம்பு கடித்ததால் அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் ரோஹித் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர் குடி போதையில் இருந்துள்ளார். மேலும் பாம்பை இறுக்கமாக பிடித்து கையால் அடிப்பதும் காணப்படுகின்றது. மேலும் சில சமயங்களில் அவர் கை மற்றும் நாக்கைக் கடிக்க பாம்பை தூண்டுவதையும் நாம் இந்த வீடியோவில் காணலாம். இதற்கிடையில், பாம்பு கடித்ததால் அந்த இளைஞன் உயிரிழந்தார்.

வீடியோவை இங்கே காணுங்கள்:

இறந்த ரோஹித் 6 உடன்பிறந்தவர்களில் கடைசி சகோதரர் ஆவார், மற்றும் வீட்டில் தனது மைத்துனருடன் வசித்து வந்தார். இந்த வீடியோ வைரலானது மட்டுமின்றி பலர் அந்த வாலிபரை திட்டி தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | முட்டை பொரி சாப்பிடுபவர்கள் உடனே இந்த வீடியோவை பாருங்கள்.. அதிர்ச்சி தரலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News