இனி இந்த நாட்டில் எங்கள் Search Engine வேலை செய்யாது என அச்சுறுத்தும் Google

செய்தி உள்ளடக்கங்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தினால் தனது சர்ச் எஞ்சினின் இயக்கத்தை அந்நாட்டில் நிறுத்திவிடுவதாக கூகிள் அச்சுறுத்தியது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2021, 05:20 PM IST
  • ஆஸ்திரேலியாவில் தங்கள் தேடுதள இயக்கத்தை நிறுத்தவுள்ளதாக கூகிள் அச்சுறுத்தல்.
  • ‘நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதில்லை’ - ஆஸ்திரேலிய பிரதமர்.
  • பேஸ்புக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தளத்திலிருந்து செய்திகளை அகற்றுவதாக அச்சுறுத்தியுள்ளது.
இனி இந்த நாட்டில் எங்கள் Search Engine வேலை செய்யாது என அச்சுறுத்தும் Google title=

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் தங்கள் தேடுதள இயக்கத்தை நிறுத்தவுள்ளதாக கூகிள் நிறுவனம்அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, ‘நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதில்லை’ என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். செய்தி உள்ளடக்கங்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தினால் தனது சர்ச் எஞ்சினின் இயக்கத்தை அந்நாட்டில் நிறுத்திவிடுவதாக கூகிள் அச்சுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆஸ்திரேலியாவில் (Australia) நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களுக்கு ஆஸ்திரேலியா விதிகளை உருவாக்குகிறது. அவை எங்கள் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படுகின்றன. இது எங்கள் அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இப்படித்தான் விஷயங்கள் நடக்கும்” என்று பிரிஸ்பேனில் செய்தியாளர்களிடம் மோரிசன் கூறினார்.

இந்த குறியீட்டின் பதிப்பு சட்டமாக மாறினால், ஆஸ்திரேலியாவில் கூகிள் (Google) தேடுத்தளத்தின் இயக்கத்தை நிறுத்துவதை விட வேறு வழி தங்களுக்கு இருக்காது என கூகிள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா கூறியதாக செய்தி நிறுவனம் ஏ.பி. தெரிவித்தது.

ALSO READ: Elon Musk அளிக்கும் 730 கோடி ரூபாய் பரிசு வேண்டுமா? அதற்கு இதை செய்தால் போதும்

அவர்கள் சேர்க்கும் மதிப்புக்காகவும், அளிக்கும் பங்கிற்காகவும் செய்தி வெளியீட்டாளர்களின் ஒரு பரந்த மற்றும் மாறுபட்ட குழுவுக்கு அவர்களுக்கான தொகையை அளிக்க கூகிள் தயாராக உள்ளது என சில்வா கூறினார். ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள விதிகளில் இணைப்புகள் மற்றும் துணுக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

குறியீட்டின் ஒருதலைபட்சமான அம்சம், கூகிளுக்கு நிர்வகிக்க நினைத்துக் கூட பார்க்க முடியாத நிதி மற்றும் செயல்பாட்டு அபாயங்களை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். மசோதாவில் செய்யப்படக்கூடிய பல மாற்றங்களை அவர் பரிந்துரைத்தார். இரு தரப்புக்கும் ஏற்ற பாதை ஒன்றை இதில் கண்டறிய முடியும் என்றும் சில்வா தெரிவித்தார்.

இது தவிர, சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்கும் (Facebook) ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தளத்திலிருந்து செய்திகளை அகற்றுவதாகவும் அச்சுறுத்தியுள்ளது. பேஸ்புக் துணைத் தலைவரான சைமன் மில்னர், புதிய விதிகளால் தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் அதிக அளவில் இருக்கும் என கூறினார்.

ALSO READ: Airtel, Jio அறிமுகம் செய்யும் Li-Fi Connection: Wi-Fi-ஐ விட 20% அதிக வேகம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News