வைரல் வீடியோ: திருமணம் என்பது மணமகனும் மணமகளும் மட்டுமல்ல, இரு குடும்பங்கள் இணையும் ஒரு அற்புதமான நிகழ்வாகும். நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களாகவே பார்க்கப்படுகின்றன. நம் நாட்டில் பல்வேறு இடங்களில் திருமணங்களில் பல்வேறு விதமான சடங்குகள் நடக்கின்றன. பல வித பழக்க வழக்கங்களும் பின்பற்றப்படுகின்றன. சமூக ஊடகங்கள் மக்களிடையே பிரபலமான பிறகு, பல இடங்களில் கடைபிடிக்கப்படும் பல வித சடங்குகளை பற்றியும், பல இடங்களில் திருமணங்களில் நடக்கும் பல்வேறு வினோத சம்பங்கள் குறித்தும் அனைவரும் தெரிந்துகொள்ள முடிகின்றது.
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
நம் நாட்டில் திருமணம் மிகவும் புனிதமாக கருதப்படுகின்றது. ஆனால், அதனுடன் தொடர்புடைய வழக்கங்கள் சில தேவையற்றவையாகவும், இன்னும் சொல்லப்போனால், கொடூரமானவையாகவும் பார்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட கொடூரமான வழக்கங்களில் ஒன்றுதான் வரதட்சணை. வரதட்சணை வாங்கும் / கொடுக்கும் வழக்கத்தை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. வரதட்சணை வாங்குபவர்கள் மற்றும் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் வரதட்சணை வாங்குபவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.
திருமணங்களில் வரதட்சனை கேட்பதும் கொடுப்பதும் குற்றம் என பல விதிகள் இருந்தாலும், சட்டங்கள் இருந்தாலும், இன்னும் இந்த கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. முன்பு இருந்த அளவு தற்போது வரதட்சணை கொடுமைகள் நடப்பதில்லை என்று தோன்றினாலும், அவ்வப்போது நாம் கேள்விப்படும் சில சம்பவங்கள் நம் எண்ணங்களை மாற்றி விடுகின்றன. சமீபத்தில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு நேர்ந்த நிலை பற்றிய ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பொதுவாகவே திருமணம் என்றாலே பெண் வீட்டார் பதட்டத்தில் இருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் மணம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும், அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற இறுக்கம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். இந்த வீடியோவில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. உத்தரபிரதேசத்தில் இருந்தும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருமணத்தின் நடுவில் மாப்பிள்ளை வீட்டார் வைத்த கோரிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அதற்கு மாப்பிள்ளை வீட்டாருக்கும் சரியான தண்டனை கிடைத்தது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வினோத சம்பவத்தை பற்றி இங்கே காணலாம்.
உத்தரபிரதேசத்தில் ஒரு திருமணத்தில் திருமண சடங்குகள் பாதி நடந்துகொண்டு இருந்தபோது மாப்பிள்ளை வீட்டார் திடீரென ஒரு குண்டைத் தூக்கி போட்டனர். பெண் வீட்டாரிடம் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால், திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறினர். அதைத் தொடர்ந்து மணப்பெண்ணும், அவரது பெற்றோரும், அவரது உறவினர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
மேலும் படிக்க | உயிரிழந்த குட்டியை எழுப்ப முயன்ற தாய் யானை: வீடியோ வைரல்
ஆனால், அதன் பிறகு ஒரு பெரிய விஷயம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையையும் அவரது குடும்பத்தினரையும் மரத்தில் கட்டி வைத்தனர். வரதட்சணை கேட்டதற்காக அவர்களுக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டது. பெண் வீட்டார் அவர்களை மரத்தில் கட்டி பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமகனின் குடும்பம் புதன்கிழமை இரவு ஜான்பூரில் இருந்து மந்தாதா பகுதியில் உள்ள ஹராக்பூருக்கு திருமணம் செய்து கொள்ள வந்தது. இதற்கிடையில் திடீரென மணமகனின் குடும்பத்தார் வரதட்சணை கேட்க ஆரம்பித்தனர். இது மணமகள் வீட்டார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில், மணமகள் வீட்டார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் மாப்பிள்ளை வீட்டார் விடாப்பிடியாக இருந்ததால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினரை மரத்தில் கட்டினர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் நாள் முழுவதும் குழப்பம் நீடித்தது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
प्रतापगढ़
दहेज मांगने पर दूल्हे को पेड़ से बांधा
दूल्हे के रिश्तेदारों को भी बनाया गया बंधक
जयमाल के बाद दहेज को लेकर हुआ विवाद
जौनपुर जिले के सुजानगंज से आई थी बारात
दूल्हे को पेड़ से बांधने का वीडियो हुआ वायरल
मांधाता थाना के हरखपुर गांव का बताया गया वीडियो pic.twitter.com/CFZ4llGxgp
— Adv Karuna sharma (@asiamanchnews) June 15, 2023
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் @asiamanchnews என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இப்படித் தான் செய்ய வேண்டும்... அப்போதுதான் மாப்பிள்ளை வீட்டாருக்கு புத்தி வரும்’ என ஒரு பயனர் கராராக எழுதி இருக்கிறார். ‘வரதட்சணை கொடுமைக்கு முடிவே இல்லையா?’ என மற்றொரு பயனர் வேதனையை தெரிவித்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ