சமூக வலைதளம் மூலம் கண்டன குரல்களை பதிவு செய்யும் திரைத்துரையினர்

திரைத்துரையினரும் சமூக வலைதளங்கள் மூலம் கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Mar 12, 2019, 01:36 PM IST
சமூக வலைதளம் மூலம் கண்டன குரல்களை பதிவு செய்யும் திரைத்துரையினர்
Zee Media

தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், யாராக இருந்தாலும் குற்றம் செய்தவன் குற்றவாளியே. எந்தவித பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும். இந்த தண்டனை மூலம் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வே நடக்கக் கூடாது என்றும் தமிழகம் முழுவதும் ஆதரவு குரல் பலமாக ஒலித்து வருகின்றன. 

குறிப்பாக பொள்ளாச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வருவதற்கு சமூக வலைதளங்கள் முக்கிய காரணமாக அமைந்தது. திரைத்துரையினரும் சமூக வலைதளங்கள் மூலம் கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.