இந்திய இளைஞர்கள் இனி வெள்ளையான காஷ்மீர் பெண்களை இனி மணப்பதால் பிரச்சனைகள் ஏதும் இல்லை என உத்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை கருத்து வெளியிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் முஷாபர்நகரில் உள்ள கதவுலி பகுதியில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாஜக தொண்டர்கள் இடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் விக்ரம் சிங், காஷ்மீர் பெண்களை இனி திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதால் கட்சியில் திருமணம் ஆகாமல் இருக்கும் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். திருமணம் ஆகமால் இருக்கும் இந்திய இளைஞர்கள் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் என சர்ச்சைகுறிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்., காஷ்மீரி பெண்களை மணக்க தற்போது எந்த பிரச்னையும் இல்லை. இதற்கு முன் பெண்கள் மீது ஏரளாமான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த பெண் ஒருவர் உ.பி.,யை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவரின் குடியுரிமை பறிக்கப்படும். ஆனால் தற்போது அந்த பிரச்சனை இல்லை.
இந்திய குடியுரிமையில் இருந்து காஷ்மீர் குடியுரிமை மாறுபட்டு இருக்கும். தற்போது இந்த தடைகள் நீக்கப்பட்டதால் கட்சியில் உள்ள இஸ்லாமிய தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
Muzaffarnagar BJP MLA Vikram Saini on abrogation of Article 370.
"Muslim karyakartas sitting here should be celebrating. Marry "gori ladki" from Kashmir now" pic.twitter.com/tRhZXy8IZq
— Piyush Rai (@Benarasiyaa) August 6, 2019
காஷ்மீரில் உள்ள வெள்ளையான பெண்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதால் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை இந்திய இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். இந்து, முஸ்லிம் என ஒவ்வொருவரும் கொண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்த நாடே இதனை கொண்டாடி வருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு., இதில் தவறு ஏதும் இல்லை. இனி யார் வேண்டுமானாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். இது தான் உண்மை, இதைத் தான் நானும் கூறினேன். இது காஷ்மீர் மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம். இந்த சுதந்திரத்தை கொண்டாடத்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். காஷ்மீரில் இருக்கும் அனைவரும் அழகானவர்கள் என்பதால் அங்கு வீடு வாங்க நினைக்கிறேன் எனவும் விக்ரம் சிங் தெரிவித்தார்.
விக்ரம் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதாக கூறுபவர்கள் வீடு மீது குண்டுகளை எறிய வேண்டும் என பேசி பரபரப்பை கிளப்பியவர்.