Snail Walking Video: தாளம் தப்பா நடன நடை பயிலும் நத்தையின் நர்த்தனநடை

Snails Walking Video: நத்தைகளின் க்யூட்டான நடையை பார்க்கும் அரிய சந்தர்ப்பம் இதுவரை கிடைக்காதவரா நீங்கள்? இதோ உங்களுக்காக அற்புதமான வாக்கிங் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 3, 2022, 07:09 PM IST
  • நத்தைகளின் தாள நடை
  • நத்தையின் தாளம் தப்பாத நடைபயிற்சி
  • ஓடுள்ள நத்தையின் ஒருவழிப் பாதை
Snail Walking Video: தாளம் தப்பா நடன நடை பயிலும் நத்தையின் நர்த்தனநடை title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பற்பல வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அவற்றில் விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை வீடியோக்கள் வைரலாகின்றன. விலங்குகளுடன் நேரம் செலவிட ப்யப்படுபவர்கள் கூட அவற்றின் வீடியோவை பார்த்து ரசித்து லைக் போட்டு, பகிர எவ்வளவு நேரமானாலும் கவலைப்படுவதில்லை.

சிலர் வீட்டில் இருக்கும்போது செல்லப்பிராணிகளுடன் விளையாடினால், வெளியில் செல்லும்போது விலங்குகள், ஊர்வன, பறப்பன என பிற உயிரினங்களை கண்டால், அவற்றை ஆர்வத்துடன் படமெடுக்கின்றனர், முடிந்தால் வீடியோ பதிவு செய்கின்றனர்.

அந்த வீடியோக்களில் பல இணையதளங்களில் பதிவேற்றப்பட்டு, அற்புதம், அருமை என பாராட்டுக்களை பெறுகின்றன. நாம் நேரடியாக பார்க்கமுடியாத அதிசயத் தருணங்களை தொழில்நுட்ப கருவிகளும், விஞ்ஞான அறிவும் நம்மை அனுபவிக்கச் செய்கின்றன

மேலும் படிக்க | குரங்குப்பிடி வேண்டாம்மா: செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு

விலங்குகளின் புத்திசாலித்தனம் அவற்றின் அப்பாவித்தனம் ஆகியவை மனதை மயக்குபவை. இன்றைய நவீன உலகில், எதிர்பாராத தருணங்களையும், சிறு சிறு நிகழ்வுகளையும் படம் பிடித்து அவற்றை இணையத்தில் பதிவேற்றுவதால் பலராலும் ஒருவர் அனுபவித்த விஷயத்தை, மற்றப்வர்களும் பார்த்து ரசிக்க முடிகிறது.

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் பல வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் நத்தைகளின் வீடியோ க்யூட்டாக இருக்கிறது. நத்தைகள் நடக்கும் தருணத்தை இதுவரை கண்டிராதவரா நீங்கள்? நத்தைகளின் நர்த்தன வீடியோவை @buitengebieden என்ற டிவிட்டர் கணக்கு பகிர்ந்துள்ளது.

அற்புதமான இந்த வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்கள்

இந்த வீடியோஇணையத்தில் வெளியாகி பலரின் மனதையும் கவர்ந்துள்ளது.இதுபோன்ற இயல்பான நிகழ்வுகளையும், வித்தியாசமான வீடியோக்களையும் பதிவேற்றுவதில் பிரபலமா டிவிட்டர் கணக்கில் இருந்து நத்தைகளின் நடைபயண வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும்போது அழகாக இருந்தாலும், அவற்றின் நடைவேகத்தைப் பற்றிய பாப்பா பாட்டு நினைவுக்கு வருகிறது.

 மேலும் படிக்க | வம்புக்கு இழுக்கும் விவகார குழந்தை - வைரல் வீடியோ

நத்தை அம்மா, நத்தை அம்மா, எங்கே போகிறாய்?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன்
எத்தனைநாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான்; வேணுமானால் பார்த்துக் கொண்டிரு...

மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News