‘டேய்..... இத பாருடா’: ஃபோனுக்கு ஃபேனான குரங்கு, வியக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Monkey Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் யாராலும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. குரங்கு கையில் போன் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? விடைதான் இந்த வீடியோ!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2023, 04:27 PM IST
  • குரங்குகளுக்கு இணையத்தில் மவுசு அதிகம்.
  • பல இணையவாசிகள் குரங்குகள் செய்யும் குறும்புகளுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
  • மனிதர்களை பல விஷயங்களில் அப்படியே காப்பி அடிப்பதில் குரங்குகளுக்கு இணை வேறு எந்த விலங்குகளும் இல்லை.
‘டேய்..... இத பாருடா’: ஃபோனுக்கு ஃபேனான குரங்கு, வியக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகளுக்கு இணையத்தில் மவுசு அதிகம். பல இணையவாசிகள் குரங்குகள் செய்யும் குறும்புகளுக்கு ரசிகர்களாக உள்ளனர். மனிதர்களை பல விஷயங்களில் அப்படியே காப்பி அடிப்பதில் குரங்குகளுக்கு இணை வேறு எந்த விலங்குகளும் இல்லை. குரங்குகள் பல விஷயங்களில் ஆராயும் ஆர்வத்தையும், உத்வேகத்தையும் காட்டுகின்றன. குரங்குகளின் இந்த அம்சத்தை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் தங்களது வழக்கமான களத்திற்கு வெளியே உள்ள பகுதிகளையும் சோதித்துப்பார்க்கும் ஆர்வம் காட்டுகின்றன. 

மிக சுவாரசியமான குரங்குகளின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில், மனிதர்களைப் போலவே குரங்குகளும் மிக உன்னிப்பாக மொபைல் போனை பார்ப்பதை காண முடிகின்றது. 

 வீடியோவில் ஒரு நபர் மொபைல் போனை குரங்குகளுக்கு காண்பிப்பதை பார்க்க முடிகின்றது. அதை பார்த்த குரங்குகள் அந்த மொபைல் காட்சியில் மூழ்கி விடுகின்றன. ஒரு குரங்கு மனிதர்களை போலவே மொபைல் ஸ்க்ரீனை இப்படியும் அப்படியுமாக தள்ளுகிறது. மற்ற குரங்குகளும் ஒரே பரபரப்பாக அந்த போனை பார்க்கின்றன. போனின் மீது குரங்குகளுக்கு உள்ள ஆர்வம் அந்த வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகின்றது. 

மேலும் படிக்க | சீண்டிய பெண்ணை வெச்சி செஞ்ச குரங்கு: ‘இது தேவையா’.. கேட்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 

குரங்குகளின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ ட்விட்டரில் @wasimkhan0730 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

விலங்குகள் அதிக அளவிலான மூளைத்திறனைக் கொண்டவை என்பது மிகவும் அறியப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். மேலும் அவை அவற்றின் இயல்பான நடத்தைக்கு பொருந்தாத புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான திறன் கொண்டவை என்பதற்கும் இந்த வீடியோ ஒரு சான்றாக உள்ளது.

மேலும் படிக்க | பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பெண்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News