அந்தரங்க உறுப்பில் சிக்கிக் கொண்ட டாடா கேபிள்: Viral News

லண்டனில் வசிக்கும் ஒரு இளைஞனின் விபரீத எண்ணம் காரணமாக, அந்தரங்க உறுப்பில் USB கேபிள் சிக்கி கொண்டதால், நிலைமை மோசமானது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 11, 2021, 09:16 PM IST
  • லண்டனைச் சேர்ந்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை
  • அந்தரங்க உறுப்பை அளக்க USB கேபிள் பயன்படுத்தப்பட்டது
  • அறுவை சிகிச்சை உதவியுடன் கேபிள் அகற்றப்பட்டது
அந்தரங்க உறுப்பில் சிக்கிக் கொண்ட டாடா கேபிள்: Viral News

லண்டன்: ஒரு பிரிட்டிஷ்  இளைஞனுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. அந்த இளைஞன் தனது அந்தரங்க பகுதியை கேபிள் ஒன்றின் மூலம் அளவிட முயன்றான். அப்போது, ​​கேபிள் உள்ளே சிக்கியது. அந்த இளைஞன் USB கேபிளை அகற்ற முயன்றபோது, ​​நிலைமை மோசமானது. அவரது அந்தரங்கப் பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறத் தொடங்கியது. இதற்குப் பிறகு பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் அந்தரங்க பகுதியில் மிக மோசமாக சிக்கியிருந்த கேபிளை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். 

'தி சன்' பத்திரிகையில் வெளியான செய்தியில், லண்டனில் வசிக்கும் ஒரு இளைஞன் தனது அந்தரங்க பகுதியை USB கேபிள் மூலம் அளவிட முயன்றதாக மருத்துவர்களிடம் கூறியதாக, குறிப்பிடப்படுள்ளது. அப்போது கேபிள் மோசமாக உள்ளே சிக்கியது. அவர் கேபிளை அகற்ற முயன்றபோது, ​​இரத்தம் வெளியேறத் தொடங்கியது. இதற்குப் பிறகு அவர் தனது பெற்றோரை உதவிக்கு அழைத்துள்ளார். பெற்றோர் முதலில் அந்த இளைஞனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், அங்கிருந்து அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டார்.

ALSO READ: Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ

USB கேபிளை அகற்ற டாக்டர்கள் அந்த இளைஞனின் அந்தரங்க பகுதிக்கு அருகில் பெரிய அளவில் கீறல் செய்ய வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் தனது அந்தரங்க பகுதி எவ்வளவு பெரியது என்பதை அறிய விரும்பியதாக கூறியுள்ளார். அதனால் அருகில் கிடந்த USB கேபிளைப் பயன்படுத்தி அதை உள்ளே செலுத்தி அளக்கத் தொடங்கினார். அப்போது ​​கேபிள் நன்றாக உள்ளே சிக்கிக் கொண்டது. பல முயற்சிகளுக்குப் பிறகும், அது வெளியே வரவில்லை என்பதோடு, ரத்தப் போக்கும் ஏற்படத் தொடங்கியது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை மேற்கோள் காட்டிய அறிக்கையில், அந்த இளைஞனுக்கு எந்த உள் காயமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் கழித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்கேன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் சிறிது காலம் கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதுபோன்ற மிகவும் சோதனைகள் ஆபத்தானவை என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News