ஒடிசா மருத்துவமனை மகப்பேரு வார்டில் TikTok செயலிக்காக நடனம் ஆடி, வீடியோ எடுத்த 4 செவிலியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது!
ஒடிசாவில் உள்ள மால்கங்கரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர்களாக பணிபுரிபவர்கள் ரூபி ரே, டபாஸி பிஸ்வாஸ், ஸ்வப்னா பாலா, நந்தினி ராய். இவர்கள் கைக்குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
TikTok செயலியை பயன்படுத்தி வரும் இவர்கள், தாங்களும் இச்செயலி உதவியால் பிரபலமாக முடிவு செய்துள்ளனர். எனவே TikTok செயலிக்காக பாடலுக்கு ஆடி, வசனங்களுக்கு வாயசைத்து வீடியோ வெளி யிட முடிவு செய்தனர். மருத்துவமனையின் முக்கிய பராமரிப்பு பிரிவில் இருக்கும் அவர்கள், அங்கேயே ஆடியபடி, வீடியோ எடுத்து அதில் வெளியிட்டனர். பிறந்த குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டும் பாடலுக்கு ஆடிபாடினர். இந்த வீடியோ இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து மருத்துவமனையின் முக்கிய பிரிவில் பணியாற்றும் இவர்கள் இப்படி அலட்சியமாக பணியாற்றுவது, TikTok செயலிக்காக வீடியோ எடுக்கலாமா? என்ற விமர்சனம் எழுந்தது.
இதுபற்றிய புகார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சென்றது. அந்நிர்வாகம் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யது. இந்நிலையில் அவர்களை, மருத்துவமனை நிர்வாகம் கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.