வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திருமணம் தொடர்பான பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திருமண சடங்குகளை இணையவாசிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்ப்பதோடு, இதில் நடக்கும் வேடிக்கையான விஷயங்களையும் இவர்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். மணமக்களுக்கு இடையில் இருக்கும் காதல், பாசம், கோவம் என அனைத்து உணர்ச்சிகளையும் இந்த வீடியோக்களில் காண முடிகின்றது.
அப்படி ஒரு வினோதமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயத்தை காண்கிறோம். மணமேடையிலேயே மணமக்கள் பயங்கரமாக சண்டையிடுவதை காண நமக்கு ஆச்சரியமாக உள்ளது. இதை பார்த்தால் ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், ஒருபுறம் பரிதாபமாகவும் இருக்கிறது.
மேலும் படிக்க | டான்ஸ் சொல்லிக்கொடுத்த பெண், அப்படியே ஆடிய யானை: செம கியூட் வைரல் வீடியோ
மணமகனும், மணமகளும் தங்கள் சண்டையால் மனமேடையை மல்யுத்த மைதானமாக்கியிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அதன் பிறகு நடப்பதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. இந்த வேடிக்கையான வீடியோவை மக்கள் மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள்.
மணமகனும், மணமகளும் மேடையில் நிற்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது மணமகன் மணமகளுக்கு அன்புடன் இனிப்புகளை ஊட்டுகிறார். ஆனால் மணமகளுக்கு இனிப்பு சாப்பிட மனம் வரவில்லை போலும். அவர் சாப்பிட மருக்கிறார். ஆனால், மனமகன் வலுக்கட்டாயமாக மனமகளுக்கு இனிப்புகளை ஊட்டுவதில் ஈடுபட்டுள்ளார். மணமகனின் இந்த செயலால் கோபமடைந்த மணமகள் அவரை அறைந்துவிடுகிறார். பிறகென்ன? மணமகனும் பொறுமை இழந்து மனமகளை அடிக்க, மேடையிலேயே இருவரும் சண்டைபோடத் தொடங்குகிறார்கள்.
மேடையிலேயே மணமக்கள் போட்ட சண்டையை இங்கே காணலாம்:
Kalesh B/w Husband and Wife in marriage ceremony pic.twitter.com/bjypxtJzjt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 13, 2022
இருவருக்கும் இடையே அதிகரித்து வரும் சண்டையைப் பார்த்து, விருந்தினர்களும் அவர்களைத் தடுக்க மேடைக்கு வருகிறார்கள், ஆனால் இருவரும் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. தங்களைக் அடக்க வந்த விருந்தினர்களையும் அடித்துவிடுகிறார்கள். இந்த வீடியோ @gharkekalesh என்ற ட்விட்டர் பக்கத்திலிருந்து பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர், “அவர்களை அப்படியே WWE க்கு அனுப்புங்கள்" என்று எழுதியுள்ளார். மற்றொருவர் “இப்போதே இப்படியா” என மற்றொரு பயனர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | பன்னியை முழுசாக ஒரே நொடியில் விழுங்கிய 30 அடி நீள ராட்சத அனகோண்டா: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ