ஓடும் ரயிலில் தடபுடலாய் திருமணம் செய்த ஜோடி: வாழ்த்திய பயணிகள்.. வீடியோ வைரல்

Funny Wedding Video: தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் திருமண வீடியோ மிக வித்தியாசமாக உள்ளது. இதில் வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ஓடும் ரயிலில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வை காண முடிகின்றது.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2023, 04:46 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் max_sudama_1999 என்ற கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த திருமணத்தை ரயிலில் இருந்த ஏராளமான பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
  • இந்த வைரலான வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது.
ஓடும் ரயிலில் தடபுடலாய் திருமணம் செய்த ஜோடி: வாழ்த்திய பயணிகள்.. வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 

ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் திருமண வீடியோ மிக வித்தியாசமாக உள்ளது. இதில் வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ஓடும் ரயிலில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வை காண முடிகின்றது. 

ரயிலில் கூட திருமணம் செய்துகொள்ள முடியுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஆனால், இந்த வீடியோவை பார்த்தால், அப்படியும் நடந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும். வைரலாகி வரும் வீடியோவில், ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் தன் காதலியிடம் ஏதோ விளக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். பெண்ணின் நெற்றியில் குங்குமம் இடப்பட்டு இருக்கிறது. பெண் சற்று பயந்த முகத்துடன் காணப்படுகிறார். அவர் தன் காதலனை அணைத்துக்கொள்கிறார். அந்த இளைஞன் பெண்ணை அமரும் படி கூறுகிறார். 

மேலும் படிக்க | Viral Video: யூ டர்ன் எடுக்கிற இடமா இது.... ஆனாலும் ட்ரைவருக்கு ஒரு சல்யூட்...!!

ரயில் இருக்கையில் பெண் அமர்ந்தவுடன், ​அந்த இளைஞன் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டுகிறார். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி தன்னிடம் இருந்த மலர் மாலையில் ஒன்றை இளைஞனுக்கும், மற்றொரு மாலையை அந்த பெண்ணுக்கும் கொடுக்கிறார். மாலையை வாங்கிய பெண் எழுந்து நிற்கிறார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக்கொள்கிறார்கள். இதற்குப் பிறகு, அந்தப் பெண் தன் புது கணவனை கட்டிப்பிடித்து, பின் கால்களில் விழுந்து வணங்குகிறார். ரயிலில் இருந்த மொத்த கூட்டமும் தம்பதியைச் சுற்றித் திரண்டு, முழு சம்பவத்தையும் பார்க்கிறது. இந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் இவர்களின் திருமணத்திற்கு ஆதரவாகக் காணப்படுகின்றனர்.

ரயிலில் நடந்த தடபுடலான திருமண வீடியோவை இங்கே காணலாம்:

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் max_sudama_1999 என்ற கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் திருமணம் நடந்த இடம் அசன்சோலுக்கும் ஜாசிதிக்கும் இடையே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தை ரயிலில் இருந்த ஏராளமான பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த வைரலான வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. வைரலாகும் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | தடவிக்கொடுத்த பெண்... செம ரியாக்ஷன் காட்டிய குரங்கு: வேற லெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News