அடக்கடவுளே! நைசாக வந்த திருடனை சைஸா அடிச்சு சர்ப்ரைஸ் கொடுத்த ஹோட்டல் ஊழியர்கள்

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இப்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 07:04 PM IST
அடக்கடவுளே! நைசாக வந்த திருடனை சைஸா அடிச்சு சர்ப்ரைஸ் கொடுத்த ஹோட்டல் ஊழியர்கள் title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  இப்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.   

சிசிடிவி-யில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் மூலம் சமூக வலைதளங்களில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் தினம் தினம் வைரலாகி வருகின்றன. இவற்றில் சில, கொடூரமான திருட்டு சம்பவங்கள் தொடர்பானவையாகவும் உள்ளன. சில காண்பவர்களை முற்றிலும் ஆச்சரியப்படுத்துகின்றன. இப்போது இப்படிப்பட்ட ஒரு வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வெளிவந்து, வைரல் ஆகி வருகின்றது. 

இதில் ஒரு கொள்ளையன் ஒரு உணவகத்திற்குள் நுழைவதையும், அதைப் பற்றி ஊழியர்களுக்குத் தெரிந்து அதற்கு பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளையும் காண முடிகின்றது. உணவக ஊழியர்கள் அந்த திருடனை அடிப்பதையும் அந்த திருடன் அங்கேயே சரிந்து விழுவதையும் வீடியோவில் (Viral Video)  காண முடிகின்றது. 

ALSO READ | Accident Video: ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்! மயிர் கூச்செறியும் கார் பந்தய வீடியோ!

கொள்ளையனை உணவக ஊழியர்கள் அடித்து உதைத்தனர்

வைரலான இந்த வீடியோவில், ஒரு கொள்ளையன் உணவகம் ஒன்றுக்குள் நுழைவதைக் காண முடிகிறது. ஆனால், அந்த திருடன் தனது வேலையில் இறங்கும் முன்னர், உணவக ஊழியர்களுக்கு அந்த திருடனைப் பற்றி தெரிய வருகிறது. அவர்கள் அத்திருடனை அடிக்கத் துவங்குகின்றனர். 

முதலில் ஊழியர்களை திருடனை நாற்காலிகளால் தாக்குகிறார்கள். பின்னர் மேலும் இரண்டு, மூன்று ஊழியர்கள் சேர்ந்து கொள்ளையனை முழுமையாகக் கட்டுப்படுத்தி விடுகின்றனர். இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

அந்த வேடிக்கையான வைரல் வீடியோவை இங்கே காணலாம்

இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ கிளிப் memewalanews என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்தால், கொள்ளையனை உணவக ஊழியர்கள் ஏற்கனவே கண்காணித்து இருப்பது தெரிய வருகிறது. இந்த வீடியோ சூப்பராக வைரல் ஆகி வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் (Netizens) பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

ALSO READ | பாம்பை பாடாய் படுத்தும் சிறுவன், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News