Be Strong: 22 அடி பாம்பை தோளில் சுமந்து செல்லும் அதிசய மனிதர்!

மிருகக்காட்சிசாலையில் 22 அடி பாம்பை ஒருவர் தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்லி, கரப்பான் பூச்சிக்குக் கூட பயப்படுபவர்கள் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

Written by - Malathi Tamilselvan | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 03:49 PM IST
  • 22 அடி பாம்பு
  • அதை தோளில் சுமந்து செல்லும் அதிசய மனிதர்!
  • உங்களுக்கும் இந்த ஆசை இருக்கிறதா?
Be Strong: 22 அடி பாம்பை தோளில் சுமந்து செல்லும் அதிசய மனிதர்! title=

மிருகக்காட்சிசாலையில் 22 அடி பாம்பை ஒருவர் தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்லி, கரப்பான் பூச்சிக்கு பயப்படும் சாதாரண மனிதர்களுக்கு இந்த வீடியோ பயமூட்டுவதாக இருக்கலாம்.

ஊர்ந்து செல்லும் விலங்கினங்களுக்கு (reptiles) பயப்படுபவர்கள் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்க வேண்டாம். 

மிருகக்காட்சி பராமரிப்பாளர் ஜெய் ப்ரூவர் (Jay Brewer) பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற ஊர்வனவற்றின் படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இந்த அவர் வெளியிட்ட வீடியோ அனைவரையும் உறைய வைத்துவிட்டது.

ப்ரூவர் தனது தோளில் 22 அடி பாம்பை எடுத்துச் செல்லும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பலவீனமானவர்களுக்கு அல்ல.

Also Read | Age is just a Number: 90 வயதில் தனது தொழிலைத் தொடங்கி பிரபல இன்ஸ்டா ஸ்டாரான பாட்டி

வீடியோவில், ப்ரூவர் மிருகக்காட்சிசாலையின் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் பிரம்மாண்டமான பாம்பை எடுத்துச் செல்வதை பார்க்க முடிகிறது. "22 அடி நீளமும், 250 பவுண்டு எடைஇயும் கொண்ட பாம்பை நகர்த்த யாரும் உதவவில்லை. எனவே இந்த பாம்பை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மிகவும் பழமையான முறையை பின்பற்றுகிறேன்" என்று இணைப்புச் செய்தியை வீடியோவுடன் ப்ரூவர் பகிர்ந்துள்ளார்.

பார்க்கவே அச்சுறுத்தும் வீடியோவை பகலில் மட்டும் பார்க்கவும்…

ஆகஸ்ட் 5 ம் தேதி ப்ரூவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 7.1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள், பலர் பயத்தை வெளிப்படுத்தினர், மற்றவர்கள் பாம்பு ஒரு 'ஆர்வமுள்ள குழந்தை' என்று சொன்னார்கள்.

ஒரு பயனர், "இந்த பாம்பு, ஒரு ஆர்வமுள்ள குழந்தை போல் இருக்கிறது, என்ன ஒரு நல்ல சவாரி," என்று எழுதினார், மற்றொருவரோ "இது நெளிகிறது" என்று எழுதியுள்ளார்.

Also Read | வீடியோவில் பேசிக் கொண்டிருந்த தாயை சுட்டுக் கொன்ற பச்சிளம் குழந்தை

"பார்க்க பரவசமாயிருந்தாலும், வினோதமானது" என்று மற்றுமொரு இணையவாசி சொன்னால், "இதை நான் என் முன்னாள் காதலியின் திருமணத்திற்கு பரிசளிக்க வேண்டும்" என்று மற்றவர் ஒரே போடாக போடுகிறார்.

ஒரு பயனர் ப்ரூவரிடம் பாம்பு தொடர்பான கேள்வியையும் கேட்டார், "பாம்பு, இவ்வளவு நீளமாக வளர எவ்வளவு  காலம் ஆனது?". இந்த கேள்விக்கு பதிலாக "சில வருடங்கள் ஆனது" என ப்ரூவர் பதிலளித்தார்.

சரி, நீங்கள் இந்த பாம்பை செல்லப் பிராணியாக வளர்க்க விரும்புகிறீகளா?  

Also Read | இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News