பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான பதிவு ஒன்றினை இட்டிருப்பது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சமூக விஷயங்கள் சார்ந்த கருத்துகளை பேசி வருகின்றார். இதன் மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் 9.81 மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்றுள்ளார். இதில் இம்ரான் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் தனது ட்விட்டர் பக்கதில் உத்வேக வரிகளை பதிவிட்டிருந்தார். இந்த பதிவுதான் தற்போது நெட்டீசன்களுக்கு தீனியாய் அனைந்துள்ளது.
Those who discover and get to understand the wisdom of Gibran's words, cited below, get to live a life of contentment. pic.twitter.com/BdmIdqGxeL
— Imran Khan (@ImranKhanPTI) June 19, 2019
இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘யாரேனும் ஞானத்தை புரிந்துக் கொள்ள மற்றும் அதனை கண்டறிய வேண்டும் என்றாலும், மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றாலும் கீழே உள்ள ஜிப்ரானின் வார்த்தைகள் வழி வகுக்கும்’ என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை இணைத்து பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவில் சில எழுத்துப்பிழைகள் இருந்தது, அதுமட்டும் அல்லாமல் அந்த வார்த்தைகள் கவிஞர் கலீல் ஜிப்ரானுடையது அல்ல. அவை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் ஆகும்.
இதனைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் கமெண்ட் அடிக்க, வரிசையாக அடுத்தடுத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இந்த கமெண்ட்டுகளில் ஒருவர், ‘இம்ரான் உண்மையாகவே ஒரு நாட்டின் பிரதமர்தானா?, ட்விட் செய்வதற்கு முன்பாக அது யாருடையது என்பதை சரியாக குறிப்பிட வேண்டும் என்பது கூடவா தெரியாது?’ என குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரது சமூக ஊடக கணக்குகள் அட்மீன்களாளே மேலாண்மை செய்யப்பட்டு வருகின்றன. எனவே இம்ரான் கானின் இந்த பதிவிற்கும் அவரது அட்மின் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.