கடைக்குள் சென்று சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து சாப்பிடும் புறா! வைரலாகும் வீடியோ!

புறா ஒன்று கடைக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் சிப்ஸ் பாக்கெட்டை வாயில் கவ்வி எடுத்து கொண்டு வெளியேறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2022, 04:46 PM IST
  • புறாவின் செயலால் வைரலான வீடியோ.
  • கடைக்குள் சென்று சிப்ஸ் பாக்கெட்டை எடுக்கும் புறா.
  • புறாவின் செயல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
கடைக்குள் சென்று சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து சாப்பிடும் புறா! வைரலாகும் வீடியோ! title=

இணையத்தில் அன்றாடம் பல அரிய நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  அந்த வகையில் தற்போது ஒரு வெண்மை நிற புறாவின் செயல் இணையத்தை கலக்கி வருகிறது.  பொதுவாக புறாக்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பறவை.  இந்த பறவைகளை புராண இதிகாசங்களில் சமாதானத்திற்கான அடையாளமாகவும், தூது செல்லப் பயன்படுத்தும் ஒரு வாகனமாகவும் பாவித்து செய்திகள் உள்ளன.  யாருக்கும் தெரியாமல் ஒரு கடைக்குள் சென்று புறா சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வெளியேறும் காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | சிறுத்தையின் பார்வையில் சிக்கிய முதலை; இரையானதா.. இரையாக்கியதா..!!

இந்த வீடியோ டிவிட்டரில் ஆவ்சம் நேச்சர் மற்றும் இன்கிரிடிபிள்ஸ் என்கிற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  இந்த வைரல் வீடியோவில் வெண்மை நிறப் புறா ஒன்று பிளாட்பார்மில் சிறிய குழந்தை போல அதன் இரு கால்களாலும் தத்தித் தத்தி நடந்து செல்கிறது.  பிளாட்பார்மில் நடந்து சென்று கொண்டிருந்த புறா தனது திடீரென்று திறந்திருந்த ஒரு ஷாப்பிங் மாலுக்குள் புகுந்து உள்ளே செல்கிறது அடுத்த சில வினாடிகளில் அந்த கடையை விட்டு வெளியேறிய புறா தனது வாயில் ஒரு சிப்ஸ் பாக்கெட்டுடன் வருகிறது.  இந்த காட்சி காண்போரை அதிசயிக்க செய்துள்ளது.

 

இந்த வீடியோ உடன் "அற்புதமான இயற்கை" என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது.  புறாவின் செயலைக் கண்ட பலரும் புறாவின் செயல் அழகாக இருக்கிறது என்றும் இந்த வீடியோ மென்மேலும் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  மார்ச் 16ஆம் தேதி டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ இதுவரை 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.

மேலும் படிக்க | சிங்கத்தை துரத்தி துரத்தி முத்தமிடும் ஆமை - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News