மாரி 2 திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு தேவா!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 1, 2018, 05:48 PM IST
மாரி 2 திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு தேவா!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்!

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த ஹிட் படம் மாரி. இப்படத்தின் வெற்றியை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர். 

முதல் பாகத்தினை இயக்கிய பாலாஜி மோகன் இரண்டாம் பாகத்தினை இயக்க தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்து வருகின்றார்.

பெரும் எதிர்பார்ப்பினை தூண்டிவரும் இப்படத்தில், பாடல் ஒன்றுக்கு நடிகர், நடன இயக்குனர் பிரபு தேவா அவர்கள் நடனம் அமைத்துள்ளதாக திரைப்பட நாயகன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்!

More Stories

Trending News