நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 6 வயது ஆண் யானை மரணம்

கோவை மாவட்டம் பூச்சியூரில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 6 வயதுள்ள ஆண் யானை மரணமடைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2021, 11:59 AM IST
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 6 வயது ஆண் யானை மரணம் title=

கோவை மாவட்டமத்தை அடுத்த துடியலூர், பெரியநாய்க்கன்பாளையம் ஆனைக் கட்டி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தடாகம் காப்புக் காடு மத்திய பின்னிருப்பு காவல் படை (CRPF) பயிற்சி கல்லூரி அருகே சிறிய பள்ளத்தில் 6 வயது ஆண் காட்டு யானை (Elephant Video) ஒன்று வழுக்கி விழுந்துள்ளது.

ALSO READ:Viral Video: ரயில்வே பிளாட்பாரத்தில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண்

எனவே இது தொடர்பாக தகவல் அறிந்த வனச்சரக அலுவலர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு உடைப்பினடியாக விரைந்து அங்கு அங்கு அந்த பள்ளத்தை சீர்படுத்தினர். இதையடுத்து அங்கு அந்த காட்டு யானைக்கு  உரிய சிகிச்சைகள் அளித்தனர். பின்னர், அந்த காட்டு யானை தானாக எழுந்து புதர் பகுதிக்குள் சென்றது. அதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை 7 மணியளவில் பூச்சியூர் அருகே உள்ள வனப்பகுதிக்கு வெளியே 250 மீட்டர் தொலைவில் வந் பட்டா நிலத்திற்குள் அந்த காட்டு யானை வந்தது. அப்போது அந்த யானை தண்ணீர் குடிக்காத காரணத்தால் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு யங்கி கீழே விழுந்தது. 

 

 

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த முதுமலை கால்நடை டாக்டர்கள் விரைந்து சென்று யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தது.

ALSO READ: Viral Attack: கடலில் நீந்திய இளைஞனின் ஆண்குறியை கடித்துக் குதறிய சுறா​ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News