பட்டப் பகலில் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

Attack video Goes Viral: கண்களில் மிளகாய் பொடியை வீசி, அடித்துக் கொன்ற பீகார் மாநில வீடியோ மனதை பதைபதைக்கச் செய்கிறது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 9, 2023, 09:46 PM IST
  • அடி வாங்கி துடிக்கும் இளைஞன் வீடியோ வைரல்
  • நட்டநடு ரோட்டில் கொலைவெறித் தாக்குதல்
  • நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் கொடூர வீடியோ
பட்டப் பகலில் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள் title=

தாக்குதல் வீடியோ வைரல்: பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் சாலையோரத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தகவல்களின்படி, அடையாளம் தெரியாத தாக்குதலாளி, 20 வயதான ராகுல் குமாரை வழிமறித்து, அவரது கண்களில் மிளகாய்ப் பொடியை வீசினார். பாதிக்கப்பட்ட இளைஞரை கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதத்தால் 30 முறை குத்தியதில் பலத்த காயம் அடைந்த ராகுல் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் கொடூரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவில் ராகுலின் கண்களில் மர்மநபர்கள் மிளகாய் பொடியை வீசியதையும், பின்னர் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் கத்தியால் இரக்கமின்றி தாக்குவதையும் காட்டுகிறது. 

எச்சரிக்கை: இந்த வீடியோவைப் பார்த்தாலே மனம் பதறும் என்பதால், பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.  

மனதை பதற வைக்கும் வைரல் வீடியோ...

ஒரு சாலையின் மூலையில் இளைஞர்கள் பலமுறை குத்திக் கொல்லப்பட்டதை பார்த்தாலும், அதை தடுக்க முயலாமல் மக்கள் நடந்து செல்வதையும் பல வாகனங்கள் கடந்து செல்வதையும் காணமுடிகிறது.

மேலும் படிக்க | ரவுடி பேபி மனைவியின் வெறித்தாக்குதல்! பாவப்பட்ட கணவர் வீடியோ வைரல்

இந்த குற்றச் சம்பவம் பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் ஷிவ் நகர் பகுதியில் வசிக்கும் ராகுல் என்பவரின் மீதான தாக்குதலின் போது பதிவான சிசிடிவி காட்சிகள். பீகாரை சேர்ந்தவராக இருந்தாலும், ராகுல் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரில் வசித்து வந்தார். வாசுதேவ் குமார் என்பவரின் மகன் ராகுல்,  சத் பூஜையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தான்.

அப்போது தாக்கப்பட்டு உயிரிழந்த ராகுலின் சடலத்தை ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ் வாகனம் எதுவும் இல்லாததால், ஒரு இ-ரிக்ஷாவில் இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுலுக்கு ஒரு போன் வந்ததாகவும், அதை அடுத்து, ராகுல் அந்த இடத்திற்கு வந்ததாக உயிரிழந்த ராகுலின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

"20 வயதான ராகுல் குமார் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டார், தோராயமாக 35 முதல் 40 வயதுடையவர்," என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினார், நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி காவல்துறை இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது.

மேலும் படிக்க | ரவுடி பேபி மனைவியின் வெறித்தாக்குதல்! பாவப்பட்ட கணவர் வீடியோ வைரல்

“குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஸ்கேன் செய்து வருகிறோம். பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் பிரசாத் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்ய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு காரணம் என்ன என இதுவரை தெரியவில்லை. ஆனால், அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் கொடூரமான தாக்குதலும், தாக்கியவரின் வெறியும் தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோ எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு, பலரும் பார்த்து அதிர்ந்து போகின்றனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வீடியோ! கேண்டிட் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News