)
சிம்புவின் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படகுழுவினர் வெளியிட்டுள்ளனர்..!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் மாநாடு. பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு மீண்டும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில், திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாத நிலையில் அதை பயன்படுத்தி சிம்பு தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து இளமை தோற்றத்திற்கு வந்துள்ளார். இதுவே ரசிகர்களுக்கு தனி உற்சாகத்தை கொடுத்த நிலையில் இன்று மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
#MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/Xb4By0DRoS
— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020
'ஈஸ்வரன்' படத்தை முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தற்போது புதுச்சேரியில் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 24 ஆம் தேதி வரை இந்தப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
சிம்புவின் மாநாடு படத்தின் அவர் கோவில் படத்தில் நாம் கண் முன் வந்த சிம்புவை போன்று வந்துள்ளார். முழுக்க அரசியலைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.