அனைத்து சாதனைகளை முறியடிக்க ரெடியாகும் “2.0” படத்தின் டீசர்

இணையதளத்தை கலக்க காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.. நாளை "2.0" படத்தின் டீசர் வெளியிடப்படும்/

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 12, 2018, 08:04 PM IST
அனைத்து சாதனைகளை முறியடிக்க ரெடியாகும் “2.0” படத்தின் டீசர்
Pic Courtesy : @shankarshanmugh

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் டீசர் நாளை (செப்டம்பர் 13) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

 

இந்த படம் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இதுதான். இந்த படத்திற்கு 3000 பேர் கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாகவும் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்பது உறுதி.

 

நாளை விநாயகர் சதுர்த்தியை 2.0 படத்தின் டீசர் 3டி தொழில்நுட்ப வடிவத்தில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் கான ஏற்ப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான டிக்கெட்டை பதிவு செய்துக்கொள்ளலாம்.

 

இந்த வருடம் நவம்பர் 29 ஆம் தேதி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2.0 படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.