ஓநாய்களிடம் தப்பிக்க மரத்தில் தொற்றிய மனிதர்கள்? கரணம் தப்பினால் மரணம் வீடியோ வைரல்

OMG Video Of Disney Land: விளையாட்டுக்காக உல்லாசமாக காட்டை சுற்றிப்பார்க்கப் போய் விலங்குகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? காத்திருக்கும் ஓநாயிடம் இருந்து தப்பிக்க மரம் ஏறிய மனிதர்களின் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2023, 05:44 PM IST
  • பார்த்தாலே வயிற்றைக் கலக்கும் விலங்குகளின் தாக்குதல் வீடியோ
  • கரணம் தப்பினால் மரணம்
  • ஹிப்போபொட்டமஸ் வாயில் விழுந்தா என்ன ஆகும்?
ஓநாய்களிடம் தப்பிக்க மரத்தில் தொற்றிய மனிதர்கள்? கரணம் தப்பினால் மரணம் வீடியோ வைரல்

Viral Video Of Wild Animals And Tourist: உலகில் நடைபெறும் விஷயங்களை இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ள உதவும் இணையதளமும், சமூக ஊடகங்களும் நமக்கு எங்கோ ஒரு மூலையில் நடக்கும் விசயத்தையும் உடனடியாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. இணையத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பொழுதுபோக்காகவும், பயனுள்ள பல தகவல்களை கொடுக்கும் ஆக்கப்பூர்வமான ஊடகமாகவும் மாறிவிட்டது.

கேளிக்கைக்கான ஒரு வழியாக இருக்கும் இணையதளங்களும், ஊடகங்களும், நாம் பார்க்கவே முடியாத பல விஷயங்களை நம் கைப்பேசிக்குள் கொண்டு வந்து சேர்க்கின்றன. பொழுதைப் போக்க உதவியாக இருக்கும் பல வீடியோக்கள் நம்மை கவர்ந்து, நமது பொழுதையே போக்கிவிடுகின்றன.

மேலும் படிக்க | ஆத்தாடி... குரங்கு விடுது பார் காத்தாடி: நம்ப முடியாத வைரல் வீடியோ

நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்தால், அவை ஆச்சரியமானவைகளாக இருக்கின்றன. அதிலும், விலங்குகளின் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினால், அடுத்தடுத்து வரும் வீடியோக்கள் நம்மை அவற்றின் ரசிகர்களாக்கிவிடுகின்றன.

இதனால் தான், தற்போது வீடியோக்கள் அதிக அளவில் பார்க்கப்படுகிறது. அதிலும், விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை பார்ப்பது மட்டுமா, நேரில் இருந்தாலும் பார்க்க முடியாத பல தருணங்களை மிக அருகில் இருக்கும் கேமராக்கள் துல்லியமாக படம் பிடித்து காட்டுகின்றன.

மேலும் படிக்க | பகையாளியா பங்காளியா? குஸ்தி போடும் சிங்கங்களின் மூர்க்கச்சண்டை வீடியோ வைரல்

வனத்தில் எடுக்கப்படும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்து, பலரால் பகிரப்படுகிறது. அதில் மரத்தில் மனிதர்கள் தொற்றிக் கொண்டிருக்க, கீழே விலங்குகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில், இந்த வீடியோவைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது. இதில் யாராவது ஒருவர் கீழே விழுந்தாலும், அவரின் நிலை என்னவாகும்? நினைத்தாலே திகிலூட்டும் இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றனர். 

இந்த வீடியோவுக்கு லைக்குகள் அள்ளுகின்றன, பலரும் பலவிதமான கமெண்டுகளை பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர், இது டிஸ்டி வோர்ல்டில் நடத்தப்படும் நிகழ்ச்சி என்றும், இது உண்மையில் மனிதர்கள் விலங்குகளிடம் சிக்கிக் கொண்ட இயல்பான வீடியோ இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். 

ஆனால், வீடியோவைப் பார்த்ததுமே, அச்சம் அள்ளுவதையும், அந்த தருணத்தில் மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கும் மனிதர்களின் மனோநிலை எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால், அது பயங்கரமாக இருக்கிறது.  

மேலும் படிக்க | பாம்பாட்டியை பதற வைத்த ராஜநாகம் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News