ஆத்தாடி... குரங்கு விடுது பார் காத்தாடி: நம்ப முடியாத வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்கு காத்தாடி விட்டு பார்த்திருக்கிறீர்களா? பார்த்தால் உங்களால் உங்கள் கண்கணையே நம்ப முடியாது.. இதோ வீடியோ!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 27, 2023, 03:15 PM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • குறிப்பாக குரங்குகளின் பல வீடியோக்கள் தினமும் பகிரப்படுகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆத்தாடி... குரங்கு விடுது பார் காத்தாடி: நம்ப முடியாத வைரல் வீடியோ

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் விலங்குகளின் பல்வேறு செயல்கள் மற்றும் வேடிக்கைகள் தொடர்பான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. சில விலங்குகளின் செயல்கள் நாம் திகைக்கும் வகையில் உள்ளன. சிலவற்றை பார்த்தால் நம் நெஞ்சம் நெகிழ்ந்துவிடும். 

குறிப்பாக குரங்குகளின் பல வீடியோக்கள் தினமும் பகிரப்படுகின்றன. மனிதர்கள் செய்யும் பல செயல்களை குரங்குகள் அப்படியே செய்கின்றன. அந்த வகையில், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோவும் இதற்கு சான்றாக உள்ளது. 

காத்தாடி விடும் குரங்கு

இதில் யாரும் யோசித்துக்கூட பார்கக் முடியாத ஒரு செயலை ஒரு குரங்கு செய்கிறது. குரங்கு ஒன்று மனிதர்களை போலவே காத்தாடி விடுவதை வீடியோவில் காண முடிகின்றது. ஒரு மொட்டை மாடியில் அமர்ந்து குரங்கு மிகவும் மகிழ்ச்சியாக காத்தாடி விடுவதை காண்கிறோம். குரங்கு காத்தாடி விடும் ஸ்டைலை பார்த்தால், அது மனிதனா குரங்கா என்று கூட நம்ப முடியவில்லை. குரங்கின் இந்த மாஸ் ஸ்டைல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரல் ஆகி வருகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: பாம்பிடம் சிக்கிய தவளை; மனதை பதறச் செய்யும் கொடூர வீடியோ! 

காத்தாடி விட்டு மாஸ் காட்டும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@sad_status_songs_)

களைகட்டிய குரங்கின் மாஸ் ஸ்டைல்

இந்த வீடியோ நாம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது. இப்படி ஒரு காட்சியை காண்பது அத்தனை சுபலமல்ல. குரங்கு ஒன்று காத்தாடி விடும் காட்சி மிக அரிதான ஒரு காட்சியாகும். தொலைவில் இருந்து பார்க்க அந்த குரங்கு ஒரு மனிதனைப் போலத்தான் தெரிகிறது.  கூர்ந்து கவனித்தால்தான் அது ஒரு குரங்கு என்பது நமக்கு தெளிவாகிறது. 

இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் 'sad_status_songs' என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் நான்கு லட்சம் பேர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் குரங்கை வெகுவாக புகழ்கிறார்கள். 

மேலும் படிக்க | வகுப்பறையில் செய்ய வேண்டிய செயலா இது, மாணவர்களின் வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News