தங்கத்திற்கு டஃப் கொடுத்த எலுமிச்சை பழம்: 2.36 லட்சத்திற்கு ஏலம்... வியக்க வைக்கும் காரணம் இதோ!!

Panguni Uthiram 2024: ஒவ்வொரு வருடமும் நடப்பது போலவும் வேலில் பொருத்தப்பட்ட எலுமிச்சை பழங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் எடுத்தனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2024, 11:45 AM IST
  • பூஜைக்காக வைக்கப்பட்ட வெறும் 9 எலுமிச்சை பழங்கள் 2.36 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது.
  • எலுமிச்சையின் விலை திடீரென விண்ணைத் தொட்டதன் காரணம் என்ன?
  • இந்த எலுமிச்சை ஏன் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது?
தங்கத்திற்கு டஃப் கொடுத்த எலுமிச்சை பழம்: 2.36 லட்சத்திற்கு ஏலம்... வியக்க வைக்கும் காரணம் இதோ!! title=

Panguni Uthiram 2024: லட்சங்களில் விற்கப்பட்ட எலுமிச்சை பழங்கள்!! போட்டி போட்டு வாங்கப்பட்ட வினோதம்!! தங்கத்திற்கு டஃப் கொடுத்த எலுமிச்சை பழம்!! என்னதான் நடந்தது? எலுமிச்சையின் விலை திடீரென விண்ணைத் தொட்டதன் காரணம் என்ன? பூஜைக்காக வைக்கப்பட்ட வெறும் 9 எலுமிச்சை பழங்கள் 2.36 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. எலுமிச்சம்பழத்தை இவ்வளவு காசு கொடுத்து வாங்க காரணம் என்ன? இந்த எலுமிச்சை ஏன் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பங்குனி உத்திரம் திருவிழா: இரட்டை குன்று முருகன் கோவில் 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம்

இந்த இரட்டை குன்று முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் போது முதல் 9 நாட்கள் மூலவர் முருகப்பெருமானின் அருகில் இருக்கும் வேலின் மீது தினம் ஒரு எலுமிச்சை பழம் வைத்து 9 நாட்களும் பூஜை செய்யப்படும். இறுதியாக 11 ஆம் நாள் விழாவின் போது இந்த பழங்கள் ஏலம் விடப்படும்.

ஒவ்வொரு வருடமும் நடப்பது போலவும் வேலில் பொருத்தப்பட்ட இந்த எலுமிச்சை பழங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் எடுத்தனர்.

மேலும் படிக்க | செய்தியாளர் சந்திப்பில் கடுப்பான தங்கர் பச்சான்! வேளாண் பட்ஜெட் போட்டால் போதுமா? கேள்வி!

வெறும் 9 எலுமிச்சை பழங்கள் 2.36 லட்சத்திற்கு ஏலம் 

அந்த 9 எலுமிச்சை பழங்களும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. அதில் அதிகபட்சமாக ஒரு எலுமிச்சை பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

எலுமிச்சை பழம் ஏன் இவ்வளவு விலைக்கு ஏலம் எடுக்கப்படுகிறது? 

குழந்தை இல்லாத தம்பதிகள் அந்த எலுமிச்சை பழத்தின் சாறை தண்ணீரில் கலந்துக் குடித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் வீட்டிற்கு செல்வமும் பெருகும் என்றும் மத நம்பிக்கை மக்களிடையே பரவிக் கிடக்கிறது. இதன் காரணமாக இந்த விசேஷ எலுமிச்சை பழத்தை ஏலம் எடுக்க மக்கள் போட்டிப்போடுகிறார்கள். 

மேலும் படிக்க | 'மக்களவை தேர்தலில் போட்டியிட பணமில்லை...' நிர்மலா சீதாராமன் கூறும் காரணங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News