மலைப்பாம்பை வகுந்தெடுத்த முதலை: வைரல் வீடியோ

மலைப் பாம்பு ஒன்றை முதலை ஆக்ரோஷமாக வேட்டையாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி, அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 30, 2023, 02:56 PM IST
  • பாம்பை முதலை வேட்டையாடும் வீடியோ
  • இன்ஸ்டாகிராமில் அதிக பார்வைகள்
  • முதலை பாம்பை கொடூரமாக தாக்குகிறது
மலைப்பாம்பை வகுந்தெடுத்த முதலை: வைரல் வீடியோ title=

பாம்பு மற்றும் முதலை இரண்டுமே கொடூரமாக வேட்டையாடும் வகையைச் சேர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவை இரண்டுமே மோதிக் கொண்டால் அல்லது ஒன்றையொன்று வேட்டையாடிக் கொண்டால் எப்படி இருக்கும்? என்று கற்பனை செய்து பாருங்கள். நிச்சயம் அந்த கற்பனை நெஞ்சுக்குள் பீதியை ஏற்படுத்துபவையாக தான் இருக்கும். அப்படியான வீடியோ ஒன்று தான் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் மலைப்பாம்பு ஒன்றை முதலை கொடூரமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. பார்க்கவே நெஞ்சை பதற வைக்கும் அந்த காட்சி இன்ஸ்டாகிராமில் அதிக பார்வைகளைப் பெற்ற வீடியோவாகவும் இப்போது இருக்கிறது.

இந்த கிளிப்பை முதலில் இன்ஸ்டாகிராமில் தேவ் ஸ்ரேஸ்தா வெளியிட்டிருக்கிறார். அவர் ஆசியாவில் உள்ள ராட்சத பாம்புகளின் வைரஸ் கிளிப்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இது ஒரு கான்கிரீட் குளத்திற்கு அடுத்துள்ள ஒருவரின் கொல்லைப்புறத்தில் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது. வீடியோ காட்சிகளில் உள்ள ஊர்வனவற்றில் இரண்டும் சிறைப்பிடிக்கப்பட்டதா? அல்லது வளர்க்கப்பட்ட ஒன்றுக்காக உணவுக்காக கொண்டு வரப்பட்டவையா? என்பது தெளிவாக தெரியவில்லை. 

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! வீடியோ வைரல்

6 அடிக்கு மேல் நீளம் கொண்டதாக இருக்கும் மலைப்பாம்பின் உடலை முதலை துடிதுடித்து கடிப்பது போன்ற காட்சிகள் தொடங்குகிறது. முதலை தன் மூக்கை முன்னும் பின்னுமாக அசைத்து, பாம்பை அடிக்கிறது. பாம்பு அதன் உடலின் ஒரு பகுதியை பெரிய ஊர்வன தலையில் சுற்றி வைக்க முயற்சிக்கும் முன், முதலையை மீண்டும் கடிக்க வீணாக முயற்சிக்கிறது. ஆனால் முதலை கொடூரமாக, வன்முறையில் முன்னும் பின்னுமாகத் தொடர்ந்து அடிக்கிறது. முதலையின் கையே அந்த வீடியோவில் மோலோங்கி இருப்பது தெளிவாகிறது. முதலையின் தாடைகளில் பாம்பு பெரும்பாலும் தளர்ந்து கிடப்பதுடன் வீடியோ முடிகிறது.

பாம்பு - முதலையின் ஆக்ரோஷமான வைரல் வீடியோ

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்தக் குறிப்பிட்ட வீடியோவின் இருப்பிடம் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒரு முதலை பண்ணையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. முதலை ஒரு பெரிய பாம்புடன் மோதுவது இது முதல் முறை அல்ல. இப்படியான வீடியோக்கள் ஏராளமாக இருக்கின்றன. சில சமயங்களில், பாம்பு வெற்றி பெறுகிறது. உதாரணமாக, 2022-ல், ஃபீல்ட் & ஸ்ட்ரீம், தென் புளோரிடாவில் உள்ள 18-அடி மலைப்பாம்பின் உடலில் இருந்து 5-அடி முதலையை ஆராய்ச்சியாளர்கள் வெட்டி எடுத்ததனர்.

மேலும் படிக்க | வேட்டைக்கு வந்த கருநாகத்தை தலையில் அடித்து கதறவிட்ட பூனை: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News