பிடிக்க வந்தவரை கடிக்க பாயும் ராட்சத நாகம்..! அய்யய்யோ..என்னாச்சு? வைரல் வீடியோ..!

Black Mamba Viral Video: பாம்பு இனங்களிலேயே மிகவும் கொடிய வகையாக கருதப்படும் பிளாக் மாம்பா வகை நாகம், தன்னை பிடிக்க வந்தவர கடிக்க பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 17, 2023, 08:32 AM IST
  • மிகவும் கொடிய விஷம் உள்ள பாம்பாக கருதப்படுவது பிளாக் மாம்பா.
  • ஆப்ரிகா கண்டத்தில் வாழும் பாம்பு வகைகளுள் இதுவும் ஒன்று.
  • பிளாக் மாம்பா, ஒருவரை கடிக்க பாயும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிடிக்க வந்தவரை கடிக்க பாயும் ராட்சத நாகம்..! அய்யய்யோ..என்னாச்சு? வைரல் வீடியோ..!  title=

உலகின் கொடிய விஷம் நிறைந்த பாம்பு வகைகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது, பிளாக் மாம்பா. இதை தமிழில் கருப்பு மாம்பா என குறிப்பிடுவர். இணையத்தில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வட்டமடித்து கொண்டிருக்கிறது. அதில், ஆளுயரத்திற்கு எழுந்து படையெடுக்கும் பிளாக் மாம்பா பாம்பு, தன்னை பிடிக்க வந்தவரை கடிக்க பாய்கிறது. 

இணையதள உலகில் நல்ல விஷயங்கள் வைரலாவதை விட, பார்ப்பதற்கே பயம் கொடுக்கும் வீடியோக்கள்தான் அதிகமாக வைரலாகின்றன. பலர் பாம்பு பிடிப்பதை தொழிலாக வைத்துள்ளனர், சிலர் அதை வைத்து வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். பாம்பு பிடிக்கும் வேலை செய்வோர் சிலர், தங்களுக்கு பாம்புகளுடன் ஏற்பட்ட அனுபவங்களை வீடியோவாக பதிவிடுவதுண்டு. பார்ப்பவர்கள் சிலர் இதை சாகசம் என நினைக்க, ஒரு சிலரோ இது போன்ற விஷயங்கள் தங்களுக்கு மிகுந்த பயத்தை அளிப்பதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

வைரல் வீடியோ:

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ப்ஒரு நபர் பிளாக் மாம்பா பாம்பை பயமில்லாமல் பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த பிளாக் மாம்பாவோ நீளத்தில் மிகப்பெரியதாக உள்ளது. 

அந்த பிளாக் மாம்பா வளைந்து நெளிந்து தப்பிக்க முயற்சிக்க, அதை அனைத்து பக்கங்களிலும் அணை கட்டுகிறார், அந்த நபர். பொறுமையை இழந்த அந்த பாம்பு, ஒரே அடியாக அவர கடிக்க, அவரது பாதி உயரம் வரை படமெடுத்து அவர் மேல் பாய பார்க்கிறது. உடனே தன் கையில் உள்ள குச்சியால் அதன் கடியை தடுத்து தப்பிக்கிறார் அந்த நபர். இதயம் பலவீனமானவர்களை மயக்கம் அடைந்து வட செய்யும் வகையில் அவ்வளவு ‘திக் திக்’ காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது இந்த வீடியோ. இறுதியில் அந்த பாம்பை பிடித்தாரா இல்லையா என்பது வீடியோவில் காண்பிக்கப்பட வில்லை. இந்த வீடியோ 4,000 லைக்ஸ்களை தாண்டி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | குட்டி நாகத்தை ‘லபக்’கென விழுங்கிய ராஜ நாகம்..! வைரலாகும் ‘திக் திக்’ வீடியோ..!

நெட்டினசன்களின் ரியாக்ஷன்..!

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ பதிவில், நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை கமெண்ட்டுகளில் தெரிவித்துள்ளனர். இதில் சிலர் தங்களது பயத்தையும் திகைப்பையும் வெளியிட்டுள்ளனர். இரு நெட்டிசன், “பல கோடி ரூபாயை கொட்டி கொடுத்தாலும் இது போன்ற செயலை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்...” என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், “கரணம் தப்பினால் மரணம் சகோ..!” என்று கமெண்ட் செய்துள்ளார். 

ஒரு சிலர், இந்த வீடியோவினால் தங்களுக்கு ஏற்பட்ட பயத்தை தெரிவிக்க, ஒருசிலர் இதில் படம்பிடிக்கப்பட்டுள்ள பாம்பை பற்றி பேசி வருகின்றனர். பலருக்கு பலவிதமான பிராணிகளை பிடிப்பது போன்று, ஒரு சிலருக்கு பாம்புகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர்கள், அந்த வகையை சேர்ந்தவர்கள் போலும். 

பிளாக் மாம்பா:

ஆப்ரிக்க கண்டத்தில் வாழும் பாம்பு வகைகளுள் ஒன்று, பிளாக் மாம்பா. உலகில் பல வகை பாம்பு வகைகளில் கொடிய விஷத்தை கக்குவதில் ராஜ நாகத்திற்கு அடுத்த இடம், இதற்குதான். வை 6 முதல் 7 அடி வரை வளருமாம். பிளாக் மாம்பாவின் தோலின் நிறம் சாம்பல் நிறத்திலும் கருப்பு படிந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். அது மட்டுமன்றி, இவை வளர வளர இவற்றின் நிறமும் மாறும். இந்த வகை பாம்புகள் பார்ப்பதற்கு கருமையாக இல்லாவிட்டாலும் அதன் வாய் பகுதி கருப்பாக இருக்கும். அதனால்தான் இதை பிளாக் மாம்பா என்கின்றனர். அடர்த்தியான காட்டு பகுதிகளிலும் பாறையின் சரிவுகளும் இவை வாழுகின்றன. 

மேலும் படிக்க | பாம்புக்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த நபர்..! சினம் கொண்டு சீறிய நாகம்..! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News