இது எங்க ஏரியா... ட்ராஃபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்!

Viral Video of Lion: திறந்த வெளியில் சஃபாரி சென்று, காட்டு விலங்குகளை அருகில் காண அனைவரும் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால், இந்த வீடியோவை நிச்சயம் பாருங்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 26, 2023, 04:26 PM IST
  • வனப்பகுதியில் சஃபாரியின் போது நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • வித்தியாசமான சிங்கம் வீடியோ ஒன்று வைரலாகியது.
  • உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
இது எங்க ஏரியா... ட்ராஃபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்! title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். அந்த வகையில், வனப்பகுதியில் சஃபாரியின் போது நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திறந்த வெளியில் சஃபாரி சென்று, காட்டு விலங்குகளை அருகில் காண அனைவரும் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால், இந்த வீடியோவை நிச்சயம் பாருங்கள். சஃபாரியில் சுமார் நான்கு ஐந்து திறந்த ஜீப் வாகனத்தில் பலர் வன பகுதியின் அழகினை ரசித்துக் கொண்டு போய் கொண்டிருக்கும் போது, இரண்டு சிங்கம் நடுவில் படுத்துக் கொண்டு ட்ராஃபிக் ஜாமை ஏற்படுத்தியுள்ளது. சிங்கங்கள் நடு ரோட்டில் படுத்துக் கொண்டு இருப்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: அடக் கொடுமையே... பேக்ட்ரியில இப்படித் தான் ஐஸ் கட்டி தயாரிக்கறாங்களா...!

வைரலாகும் சிங்கம் வீடியோ:

இந்த வீடியோ, Buitengebieden (@buitengebieden) என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் கண்டு ரசிப்பதுடன், பல விதமான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். முதலில் இரண்டு சிங்கங்கள் சாலையில் படுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். வரிசையாக வாகனங்கள் நிற்பதையும் காணலாம். அதே சமயம், மற்றோரு சிங்கம் ஒன்று, வாகனத்தின் நடுவில் புகுந்து வந்து, இரண்டு சிங்கங்களுடன் சேர்ந்து படுத்துக் கொள்கிறது. இவை மூன்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை போல தெரிகிறது. எது எப்படியோ, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரைன் சிரிக்க வைத்துள்ளது. 

காட்டுக்கு ராஜாவான சிங்கம் மிகவும் ஆபத்தான விலங்கு. அதன் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தை கருத்தில் கொண்டே, இது காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சிங்கம் முன்னால் தோன்றினால், காட்டு விலங்குகளே அஞ்சி ஓடும்.  அதன் கர்ஜனை கேட்டால், காடே அதிரும். சிங்கம் அனைத்து விலங்கையும் இரையாக மாற்றும் ஓர் சக்தி வாய்ந்த இனமாகும்

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News