Viral Video: விமான நிலையத்தில் முத்தத்தை பரிமாறிக்கொண்ட ஜோடிகள்

Kissing Video: ஒருவரையொருவர் முத்தமிட்டுக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 4, 2022, 09:49 PM IST
Viral Video: விமான நிலையத்தில் முத்தத்தை பரிமாறிக்கொண்ட ஜோடிகள் title=

வைரல் வீடியோ: மும்பை விமான நிலையத்தில் பிரபலமான நட்சத்திரங்கள் பயணம் காரணமாக அடிக்கடி வருவதைக் காணமுடியும். அப்படி ஒரு நட்சத்திரத்தின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சமீபத்தில், ஒரு நட்சத்திர ஜோடி மும்பை விமான நிலையத்தில் செய்த "சம்பவம்" கேமராவில் பதிவாகியுள்ளது. பலர் அந்த கிளிப்பை பார்த்து, அந்த ஜோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது.

ஷெஃபாலி மற்றும் பராகின் முத்தம்:
சமீபத்தில், ஷெஃபலி ஜரிவாலா தனது கணவர் பராக் தியாகியுடன் மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். அவரது கணவர் பராக் ஷெஃபாலியை ஏர்போர்ட்டில் டிராப் செய்ய வந்திருந்தார். அவர்களை ஒருவர் படம் பிடித்துள்ளார். அதைப்பார்த்த அவர்கள், கேமரா முன் இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட ஆரம்பித்னர். மீண்டும் மீண்டும் உதட்டில் முத்தமிட்டுக்கொண்டே (Lip to Lip Kiss) இருந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.

ALSO READ | இணையத்தை கலக்கும் நிக் ஜோனாஸ் & பிரியங்கா சோப்ரா 'லிப் லாக்' Video...!

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

"காந்த லகா" புகழ் ஷெபாலி ஜரிவாலா:
ஷெஃபாலி ஜரிவாலா 2002 ஆம் ஆண்டில் "காந்த லகா" பாடலின் மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தார். ஆனால் அவள் திடீரென்று காணாமல் போனார். சமீபத்தில் தான், ஷெபாலி ஜாரிவாலா தனது வாழ்க்கை குறித்து யாருக்கும் தெரியாத ரகசியத்தைப் பற்றி கூறினார். ஷெஃபாலி கூறுகையில், "எனக்கு 15 வயதிலிருந்தே வலிப்பு வந்தது. அப்பொழுது நான் நன்றாக படிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக எனக்கு வலிப்பு அடிக்கடி ஏற்பட்டது. வகுப்பறையிலும், மேடையிலும், சில சமயங்களில் சாலை செல்லும் போதுக்கூட எனக்கு வலிப்பு வந்ததுள்ளது என்றார்.

ஷெஃபாலிக்கு இந்த கொடூரமான நோய் இருந்தது:
இந்த கடுமையான நோய் குறித்து பேசிய ஷெபாலி ஜரிவாலா, 'எனக்கு அடுத்த வலிப்பு எப்போது வரும் என்று எனக்குத் தெரியாததால், நான் நீண்ட காலம் எந்தவித வேலையிலும் ஈடுபடாமல் இருந்தேன்.  இந்த பிரச்சனி என்னுடன் 15 வருடங்கள் தொடர்ந்தது. கடந்த 9 வருடங்களாக எனக்கு வலிப்பு நோய் சம்மந்தமான பிரச்சனி இல்லை. ஏனென்றால், எனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் நம்பிக்கை காரணமாக நான் பீதி, மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து வெளியே வந்திருக்கிறேன் என மகிழ்ச்சியாக கூறினார்.

ALSO READ | WATCH: வைரலாக ஒரே வீடியோவில் அம்மாவுக்கும், தங்கைக்கும் லிப்லாக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News