Viral Video: இணையவாசிகளை கவர்ந்த யானையின் LOVE ப்ரபோஸல்..!!

காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தமா என்ன! யானை தனது காதலிக்கு ப்ரபோஸ் செய்த வைரல் வீடியோ இதை உறுதி படுத்தும் வகையில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 17, 2021, 02:13 PM IST
  • சினிமா பாணியில் யானை ப்ரபோஸல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
  • காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தமா என்ன!
  • பெண் யானை சம்மதித்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த யானை
Viral Video: இணையவாசிகளை கவர்ந்த யானையின் LOVE ப்ரபோஸல்..!! title=

காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தமா என்ன! யானை தனது காதலிக்கு ப்ரபோஸ் செய்த வைரல் வீடியோ இதை உறுதி படுத்தும் வகையில் உள்ளது.

இணைய உலகத்தில், வினோதமான, விசித்திரமான மற்றும் ஆச்சரியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில ஆச்சரியத்தை கொடுக்கின்றன. சில மகிழ்ச்சியை கொடுக்கின்றன. அந்த வகையில், காதலன்-காதலியின் ப்ரொபோசல் வீடியோக்களை (Viral Video) சமூக வலைதளங்களில் மிகவும் அதிக அளவில் காணலாம். ஆனால் காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தமா என்ன... இந்த வீடியோவில் யானை தனது காதலிக்கு மிக அழகாக பிரபோஸ் செய்வது இணைவாசிகளை கவர்ந்துள்ளது.  யானையின் வீடியோ (Elephants proposal video) நிச்சயம் உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் . இந்த வீடியோவில், ஒரு யானை  (Elephants viral Video) தனது காதலிக்கு அழகான முறையில் ப்ரபோஸ் செய்வதைக் காணலாம்.

யானை ஒன்று தனது காதலிக்கு பூங்கொத்து கொடுத்து சினிமா படப்பானியில் ப்ரொபோஸ் செய்வதை வைரலான வீடியோவில் காணலாம். இந்த வீடியோவைப் (Viral Video) பார்த்தால் 'ஓ வாவ், இது ஃபிலிம் ஸ்டைல் பிரபோஸல் அல்லவா'  எனத் தோன்றும். யானை தனது காதலிக்காக தும்பிக்கையில் பூங்கொத்து எடுத்துச் சென்றதை இந்த காணொளியில் காணலாம்.

ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் மிகவும் அதிகமானோர் பார்த்துள்ளனர். யானை, தனது காதலி யானைக்கு பிரபோஸ் செய்ததும் அதனை பெண் யானை ஏற்றுக் கொண்ட உடன் யானை தும்பிக்கையை உயர்த்தி சந்தோஷத்தில் நடனமாடும் காட்சியை வீடியோவில் காணலாம். 

 
 
 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by  (@elephantsofworld)

 

இந்த வீடியோ "Elephantsofworld" என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். காணொளியை பார்க்கும் போது, ​​தன் காதலியை (Elephant proposal) தன் எதிரில் கண்டவுடன், தும்பிக்கையில் பிடித்து கொண்டு வந்து பூங்கொத்தை காதலியை நோக்கி அன்புடன் நீட்டும் காட்சியை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

யானையின் காதலி தன் காதலனின் முன்மொழிவை ஏற்று கொண்டு, தும்பிக்கையால் பூங்கொத்தை வாங்கிக் கொள்வதும் கண்கொள்ளா காட்சி தான். அதன் பிறகு யானை மகிழ்ச்சியுடன் ஆடத் தொடங்குகிறது. யானையும் காதை அசைத்து தன் காதலை வெளிப்படுத்துவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கு காதல் செய்யத் தோன்றும்.

ALSO READ | மின்வேலியில் சிக்கி பலியான குட்டி யானை, எழுப்ப முயலும் தாய் யானை, கண் கலங்க வைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News