சுட்டிக் குழந்தையின் Viral Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இது தானோ...!

IPS ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ரு சுட்டிக் குழஃந்தையின் வீடியோவை ‘முயற்சி செய்பவர்கள் தோற்க மாட்டார்கள்’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 29, 2021, 01:15 PM IST
சுட்டிக் குழந்தையின் Viral  Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இது தானோ...!

இணைய உலகத்தில் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம். அதில் கிடைக்கும் விஷயங்கள், காணும் வீடியோக்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும், சில திகிலை ஏற்படும், சில வீடியோக்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அந்த வகையில், இன்று உங்களுக்கான இந்த வீடியோவில், நீங்கள் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஒரு சேர பெறலாம்.

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை படுக்கையில் இருந்து கீழே இறங்க செய்த வேலையை பார்த்தால் உங்களுக்கு வியப்பு மேலிடும். வியப்பை அளிக்கு இந்த அற்புத வீடியோவை ஐபிஎஸ் ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவுக்கு இட்ட தலைப்பு, “முயற்சி செய்பவர்கள் தோற்று போக மாட்டார்கள்’ என்பதாகும்.

IPS ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ரு சுட்டிக் குழஃந்தையின் வீடியோவை ‘முயற்சி செய்பவர்கள் தோற்க மாட்டார்கள்’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இது அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.

ALSO READ | Viral Video: வரலாற்று சாதனை! பனிபடர்ந்த அண்டார்டிகாவில், தறையிறங்கிய விமானம்

இந்த வீடியோ மிகவும் வைரலாகியதுடன், பலர் இதற்கு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் சுமார் பத்து மாத குழந்தை தனியாக படுக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அப்போதுதான் படுக்கையில் இருந்து இறங்க வேண்டும் என்று குழந்தைக்கு தோன்றியது. அதே நேரத்தில், மிகவும் பாதுகாப்பாக இறங்க வேண்டும் என்று நினைக்கிறது அக்குழந்தை. அந்த நினைப்பே நமக்கு ஆச்சர்யத்தை தருகிறது. படுக்கையின் உயரத்தை உணர்ந்த அந்த குழந்தை, முதலில் அங்கேயே அமர்ந்து சில கணங்கள் நின்று கீழே பார்ப்பதைக் காணலாம். இதற்குப் பிறகு, அவர் படுக்கையில் இருந்து கீழே இறங்குவதற்காக படுக்கையில் வைத்திருந்த போர்வையை கீழே போடுகிறார்.

துணிகளைக் கீழே எறிந்துவிட்டு இறங்க முடியாமல் போகும் போது, ​​படுக்கையில் வைத்திருந்த தலையணைகளை ஒவ்வொன்றாகக் கீழே போடத் தொடங்குவதைக் காணலாம்.  நிறைய போர்வைகளையும் தலையணைகளையும் கீழே போட்டு விட்டு, அதன் மீது கால வைத்து குழந்தை வசதியாக கீழே வந்ததை நீங்கள் பார்க்கலாம்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

வீடியோவில் இறங்கிய பிறகு குழந்தையின் வெற்றி சிரிப்பை காண நிச்சயம் கண் கோடி வேண்டும். ஒரு போரில் வென்றது போல் புன்னகையுடன் திரும்பிப் பார்க்கிறார். இந்த வீடியோ சில காலம் பழமையானது தான். ஆனால் மீண்டும்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | சிறுகோள் மீது NASA - SpaceX ஏவும் விண்கலம்; பூமிக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படுமா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News