இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கதில் நகைச்சுவை மிக்க வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் கெய்ல் இந்தியில் பேச முயற்சிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. யுவராஜ் சிங் பகிர்ந்த வீடியோவில், கிறிஸ் கெய்ல் இந்தி வசனத்தை கூற முயற்சிக்கின்றார், ஆனால் இந்த வசனத்தை கூற முயற்சித்து தோல்வியடைகிறார். இந்த வீடியோவில் கிறிஸ் கெய்ல் கூற முயற்சிக்கும் வசனம் ஆனது "கான்பிடன்ஸ் மெராஆ! கபார் பனேகி தேரி!!" இந்த வசனத்தை அவர் எப்படி சொன்னார் என்பதை இந்த வீடியோ நமக்கு வேடிக்கையாக காட்டுகிறது.
சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் இந்தியா லெஜெண்ட்ஸை பிரதிநிதித்துவப்படுத்தியபோது யுவராஜ் சிங் சமீபத்தில் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார், பின்னர் இந்த தொடர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
Confidence meraaaa ! Kabar banegi teri !! Well sa @henrygayle pic.twitter.com/12ctFAUP9f
— yuvraj singh (@YUVSTRONG12) March 15, 2020
மறுபுறம், மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கெய்ல் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) வரவிருக்கும் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
என்றபோதிலும் IPL-ன் 13-வது பதிப்பு ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
முன்னதாக, IPL தொடர் ஆனது மார்ச் 29-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வாரியம் போட்டியை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சுகாதார நெருக்கடி காரணமாக தேசிய தலைநகரில் எந்த விளையாட்டு நடவடிக்கைகளையும் அனுமதிக்க மாட்டேன் என்று டெல்லி அரசு அறிவித்ததன் பின்னணியில் BCCI அறிக்கை வெளியானது.
இந்நிலையில் தற்போது தொடர் ஏதும் இன்றி ஓய்வில் இருக்கும் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை வேடிக்கையாக மாற்றியுள்ளனர்.