1000 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ நிகழ்வு.. குருவால் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்

ராகு, சனி மற்றும் வியாழனின் அரிய சேர்க்கை 2024 ஆம் ஆண்டில் நடைபெறுகிறது. இதனால் அனைத்து ராசிக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான இந்த அற்புதமான கிரகங்களின் சேர்க்கை எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும் என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 22, 2023, 12:17 PM IST
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
  • பதவி, கௌரவத்தால் ஆதாயம் அடைவீர்கள்.
  • முதலீடு மூலம் லாபம் கிடைக்கலாம். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
1000 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ நிகழ்வு.. குருவால் இந்த ராசிகளுக்கு குபேர யோகம் title=

1000 ஆண்டுகளுக்குப் பிறகு கிரகங்களின் அபூர்வ சேர்க்கை: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் இயக்கத்தை மாற்றி அனைத்து ராசிகளையும் பாதிக்கின்றன. வேத ஜோதிடத்தின்படி 2024 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். புத்தாண்டில் பல கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றும். அதனால் பல சுப, அசுப யோகங்கள் உண்டாகும். அந்த வகையில் தற்போது சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாண்டில் சனி, குரு மற்றும் ராகுவின் அபூர்வ சேர்க்கை நடக்கப் போகிறது. அறிவு, செல்வம், கல்வி, சமயப் பணி, குழந்தைகள், திருமணம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தாவாக குரு கருதப்படுகிறார். மறுபுறம் சனி மற்றும் ராகு இரண்டும் அசுப கிரகங்களாக கருதப்படுகிறது. இரண்டு கிரகங்களின் தீய பார்வையும் அரசனை பாமரனாக மாற்றலாம்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில், ராகு ஆண்டு முழுவதும் வியாழனின் ராசியான மீன ராசியில் இருப்பார். அதே சமயம் சனியும் மூல திரிகோண ராசியான கும்பத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது தன் இயக்கத்தை மாற்றிக் கொள்வார். மறுபுறம் மே 2024 வரை தேவ குரு வியாழன் மேஷ ராசியில் இருப்பார். அதன் பிறகு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார். ஆனால் அவரது 7ம் பார்வை மீன ராசியில் தான் இருக்கும். ஜோதிடத்தின் படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023, 30 ஆண்டுக்கு பிறகு சனி ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் கோடீஸ்வர யோகம்

கிரகங்களின் சேர்க்கையால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்:

மேஷம் (Aries Zodiac Sign): இந்த கிரகங்களின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வருமானத்தில் அதிகரிப்பு காணலாம். பதவி, கௌரவத்தால் ஆதாயம் அடைவீர்கள். காதல் உறவுகள் வலுவடையும். இதுவரை நடக்காமல் இருந்த அனைத்து காரியங்களும் சுபமாக நடக்கத் தொடங்கும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள், முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும்.

கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். செல்வம் பெருகும். உடல்நலம் மேம்படும், நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். மத நிகழ்ச்சிகளை வீட்டில் செய்யலாம். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு ராகு, வியாழன் ஆகிய கிரகங்களின் சிறப்புப் பாக்கியம் கிடைக்கும். வெற்றி மற்றும் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளியூர் பயண செல்வதற்கு திட்டமிடலாம். முதலீடு மூலம் லாபம் கிடைக்கலாம். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். புத்தாண்டில் நல்ல வாய்ப்புகள் அமையும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன் (22/12/2023): இன்று எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News