சனியின் பெரிய மாற்றம்: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... நல்ல காலம் ஆரம்பம்

Sani Vakra Nivarthi: சனியின் வக்ர நிவர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் வெற்றியின் உச்சம் தொடுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 3, 2023, 01:26 PM IST
  • தனுசு ராசிக்காரர்களின் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • பொருளாதாரம், குடும்பம் மற்றும் மனநலப் பிரச்சனைகளில் பெரும் நிம்மதியை உணர்வார்கள்.
  • இவர்களுக்கு வேலையில் நல்ல சலுகைகள் கிடைக்கும்.
சனியின் பெரிய மாற்றம்: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... நல்ல காலம் ஆரம்பம் title=

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவான் நீதியின் கடவுள் என அழைகப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிப்பதால் அவருக்கு இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. சனியின் நிலையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகவும் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் உள்ளார். ராசிகளில் அவர் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவரது தாக்கமும் அதிகமாகவே இருக்கின்றது. 

தற்போது, ​​சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4, 2023, அதாவது நாளை முதல், சனி தனது திசையை மாற்றி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதாவது அவரது இயக்கம் நேராக மாறும். சனியின் வக்ர நிவர்த்தி ஒரு பெரிய ஜோதிட மாற்றமாக பார்க்கப்படுகின்றது. சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது சில ராசிகளுக்கு சுப விளைவுகளையும் சில ராசிகளுக்கு அசுப விளைவுகளையும் அளிக்கும். எனினும் சனியின் வக்ர நிவர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். சனி பகவான் 140 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக அற்புதமான நற்பான்களை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

சனி வக்ர நிவர்த்தியால் வாழ்வில் உச்சம் தொடப்போகும் ராசிகள்

துலா ராசி (Libra):

துலா ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அதிகப்படியான நற்பலன்களைத் தரும். இவர்களின் பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறலாம், இது உங்களுக்கு ஒரு பெரிய பதவி, கௌரவம் மற்றும் பணத்தை கொண்டு வரும். உங்கள் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் நீங்கள் அதிக புகழ் பெறுவீர்கள். மதம் - ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இன்று முதல் அற்புதமான ராஜயோகம், வெற்றிகள் குவியும்

தனுசு ராசி (Sagittarius): 

தனுசு ராசிக்காரர்களின் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதாரம், குடும்பம் மற்றும் மனநலப் பிரச்சனைகளில் பெரும் நிம்மதியை உணர்வார்கள். இவர்களுக்கு வேலையில் நல்ல சலுகைகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். உயர் அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவதோடு சில முக்கியப் பொறுப்புகளையும் உங்களுக்கு வழங்கலாம். வியாபாரத்திற்கும் இது மிக நல்ல நேரமாக இருக்கும். உங்கள் நெட்வொர்க் வளர்ந்து பெரிய லாபம் ஈட்டுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்பெறும்.

மகர ராசி (Capricorn): 

சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களின் ஆளுமை மேலோங்கும், பல புதிய பொறுப்புகள் கைகூடும். மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உறுதுணையாக இருக்கும். பண வரவு இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். புதிய வேலைக்கான தேடல் முடிவுக்கு வரும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவையும் கிடைக்கும். பணியிடம் மற்றும் குடும்பத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். வியாபார விஷயங்களிலும் சனியின் வக்ர நிவர்த்தி நன்மைகளை தரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். அவ்வப்போது நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜூ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நவம்பர் மாத பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட ராசிகளும்... முழு விபரம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News