சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு ஜூலை முதல் பம்பர் வருமானம், அசத்த நன்மைகள்

Saturn Transit: சனி ஜூலை 12 அன்று மகரத்தில் நுழைவார். இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சிறப்பான பலன்களை பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 25, 2022, 04:36 PM IST
  • மகர ராசியில் சனிபகவான் பிற்போக்காககு நகர்வில் நுழைந்த உடனேயே ரிஷப ராசிக்கார்ரகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளது.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை 12 முதல் நல்ல நாட்கள் தொடங்கலாம்.
சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு ஜூலை முதல் பம்பர் வருமானம், அசத்த நன்மைகள் title=

சனி பெயர்ச்சி ஜூலை 2022: வேத ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதெல்லாம், அது மனித வாழ்க்கையிலும் பூமியிலும் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. கர்மாவுக்கு ஏற்றவாறு பலன் கொடுப்பவரான சனி, தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். 

சனி ஜூலை 12 அன்று மகரத்தில் வக்ரமாக நுழைவார். இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சிறப்பான பலன்களை பெறுவார்கள். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மீனம்: 

சனிபகவான் மீன ராசியின் 11வது வீட்டில் சஞ்சரிப்பார். இது வருமானம் மற்றும் லாபம் தரும் இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். மேலும், இந்த நேரத்தில் பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். புதிய வருமான வழிகளும் உருவாக்கப்படும். மேலும், வியாபாரத்தில் ஒரு ஒப்பந்தம் முடிவடையும். 

மறுபுறம், சனி உங்கள் 12 வது வீட்டின் அதிபதியாகவும் இருக்கிறார். எனவே இந்த நேரத்தில் நீங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறலாம். புதிய வேலை வாய்ப்பும் வரலாம். இந்த நேரத்தில் நீங்கள் பயணங்களின் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். தொழில் முதலீடுகளுக்கு சரியான நேரமாக இது இருக்கும். இந்த நேரத்தில் பழைய நாள்பட்ட நோயிலிருந்தும் விடுதலை கிடைக்கும். நீதிமன்ற வழக்கில் வெற்றி பெறலாம். 

ரிஷபம்: 

மகர ராசியில் சனிபகவான் பிற்போக்காககு நகர்வில் நுழைந்த உடனேயே ரிஷப ராசிக்கார்ரகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஏனெனில் சனிபகவான் உங்களின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். மேலும், நீங்கள் ஏற்கனவே நல்ல வேலையில் இருந்தால், அதில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும்: வெற்றியும் செல்வமும் சேரும் 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைப் பெறலாம். புதிய தொழில் தொடங்க இது சாதகமான நேரம். அதே சமயம் பணியிடத்தில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதியாக உள்ளார். ஜோதிடத்தின் படி, சனி பகவான் மற்றும் சுக்கிரனுக்கு இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே, சனியின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். மறுபுறம், சனி தேவன் உங்கள் விதியின் அதிபதி. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறலாம். தடைபட்ட வேலைகள் நடந்து முடியும். 

தனுசு ராசி: 

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை 12 முதல் நல்ல நாட்கள் தொடங்கலாம். ஏனெனில் சனி கிரகம் உங்கள் ஜாதகத்தில் பெயர்ச்சியாகும் ஸ்தானம் பணம் மற்றும் பேச்சு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். மேலும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை மீண்டும் பெறலாம்.

இந்த நேரம் வணிகத்தில் முதலீடு செய்வதற்கு சாதகமான நேரமாக இருக்கும், பணத்தை முதலீடு செய்யலாம். இப்போது முதலீடு செய்யும் பணத்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு வணிகத்தைத் தொடங்க நினைத்தால் இந்த நேரத்தில் தொடங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மறுபுறம், பேச்சு தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு  உள்ளவர்களுக்கு இந்த நேரம் நன்மை பயக்கும். மேலும், உங்கள் தடைபட்ட வேலை இந்த நேரத்தில் நடந்துமுடியும். 

மேலும் படிக்க | சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்கள்: இதை கண்டிப்பாக செய்ய வேண்டாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News