மிதுனத்தில் புதன்: இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், பம்பர் பண வரவு இருக்கும்

Mercury Transit: இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம் தொடங்கியுள்ளது. புதனின் ராசி மாற்றத்தால் இவர்கள் தொட்டது துலங்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 2, 2022, 12:49 PM IST
  • மிதுன ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
  • புதன் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை அள்ளித்தரும்.
  • புதிய வேலை தேடுபவர்களின் கனவு நனவாகும்.
மிதுனத்தில் புதன்: இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், பம்பர் பண வரவு இருக்கும் title=

புதன் ராசி பரிவர்த்தனை ஜூலை 2022: புதன் மிதுன ராசியில் நுழைந்துள்ளார். இன்று, அதாவது ஜூலை 2, 2022 அன்று நடந்துள்ள புதனின் பெயர்ச்சி பலரது வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது. 

சில ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி பண விஷயத்தில் பல நன்மைகளை கொண்டு வரும். இவர்கள் தங்கள் பேச்சு சாதுர்யத்தால் பல பெரிய வெற்றிகளை அடைவார்கள். புதன் மிதுன ராசியில் ஜூலை 17-ம் தேதி வரை இருப்பார். இந்த நேரத்தில் இவர் சூரியனுடன் இணையும் போது புதாதித்ய யோகம் உண்டாகும். எந்தெந்த ராசிகளுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் வலுவான பலன்களைத் தரும்

ரிஷபம்: 

மிதுன ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி காலம் நன்மை தரும். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணமும் இப்போது கிடைக்கும். வருமானம் கூடும். பெரிய ஒப்பந்தம் ஒன்று இந்த காலத்தில் இறுதியாகும். மொத்தத்தில், பணம் மற்றும் தொழில் இரண்டிலும் உங்களுக்கு இது ஜாக்பாட் நேரமாக இருக்கும். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 11 நாட்களுக்கு பின் இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம்

சிம்மம்:

புதன் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை அள்ளித்தரும். புதிய வேலை தேடுபவர்களின் கனவு நனவாகும். நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். 

வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும். தொழிலதிபர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள். வருமானம் அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு பணிபுரியும் இடத்தில் புதன் மாற்றத்தால் நன்மை உண்டாகும். நல்ல வேலையைச் செய்து பாராட்டையும் பெறுவார்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாகவும் இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் / மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். நண்பர்கள் உங்கள் மூலம் வாழ்க்கைக்கான நல்ல அறிவுறைகளை பெறுவார்கள். 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிக பலனளிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். குறிப்பாக சொத்து சம்பந்தமான விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பணி பாரட்டப்படும். வாழ்வில் பெரிய முன்னேற்றம் அடைவீர்கள். இந்த நேரம் தொழிலுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மிதுனத்தில் நுழையும் புதன்: நாளை முதல் இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம், மகிழ்ச்சி கூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News