மிதுனத்தில் நுழையும் புதன்: நாளை முதல் இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம், மகிழ்ச்சி கூடும்

Mercury Transit: ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசியில் மாறுகிறது. புதன் மாற்றத்தின் தாக்கம் சில ராசிகளில் சுப பலன்களையும் சில ராசிகளில் அசுப பலன்களையும் ஏற்படுத்தும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 1, 2022, 11:36 AM IST
  • மிதுன ராசியில் புதன் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
  • மனைவியுடன் உறவில் இனிமை இருக்கும்.
மிதுனத்தில் நுழையும் புதன்: நாளை முதல் இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம், மகிழ்ச்சி கூடும் title=

ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஜூலை மாதத்தில், 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றவுள்ளன. இயல்பான நகர்விலும், பிற்போக்கு நகர்விலும் இந்த மாற்றங்கள் இருக்கும். 

ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசியில் மாறுகிறது. புதன் மாற்றத்தின் தாக்கம் சில ராசிகளில் சுப பலன்களையும் சில ராசிகளில் அசுப பலன்களையும் ஏற்படுத்தும். சில குறிப்பிட்ட ராசிகளில் புதன் மாற்றத்தால் நல்ல விளைவுகள் காணக்கிடைக்கும். அந்த  அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில்  காணலாம். 

ரிஷபம்: 

ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசியில் புதன் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த ராசியின் இரண்டாம் வீட்டில் புதன் கிரகம் சஞ்சரிக்கப் போகிறது. இது பணம் மற்றும் பேச்சின் ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால், இந்தப் மாற்றத்தின் போது திடீர் பண ஆதாயங்கள் ஏற்படலாம். 

இந்த காலகட்டத்தில், வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் லாபத்தைத் தரும். கூட்டுப்பணிகள் இந்த காலத்தில் நல்ல லாபத்தை தரும். மறுபுறம், பேச்சு மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சாதகமானதாக இருக்கும். உதாரணமாக, வழக்கறிஞர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.

மேலும் படிக்க | ஜூலை மாதம் எப்படி இருக்கும்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சிம்மம்:

புதன் சிம்ம ராசிக்கு 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது ஜாதகத்தில் ஒரு முக்கிய இடமாகும். இது வருமானம் மற்றும் செலவின் ஸ்தானமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனைவியுடன் உறவில் இனிமை இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதே நேரத்தில், புதன் சிம்மத்தின் இரண்டாவது வீட்டின் அதிபதி, இது பணம் மற்றும் பேச்சின் ஸ்தானமாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்செயலாக ஒரு பெரிய தொகையை பெறக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

கன்னி:

கன்னி ராசிக்கு பத்தாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பார். இது வணிகம் மற்றும் வேலைக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்பு வரலாம். அதே நேரத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். 

வியாபாரம் விரிவடைவதற்கான வாய்ப்புகள் இப்போது உள்ளன. வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் நன்மைகள் உண்டாகும். மிதுன ராசியில் புதன் சஞ்சரிப்பது கன்னி ராசியினரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களது பரிபூரண ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Monthly Horoscope: ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும், எச்சரிக்கை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News