சனி பெயர்ச்சி 2023: இந்து ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் இருந்துவிட்டு பின், தனது ராசியை மாற்றுகிறார். இப்படிப்பட்ட நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி நாளை கும்ப ராசிக்கு மீண்டும் வருகிறார். ஜனவரி 17 அன்று இரவு 8.02 மணிக்கு சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும்.
தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் ஆகிய வாழ்வின் பல அம்சங்ளில் தாக்கம் இருக்கும். நாளை நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, சிலருக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கும். சில ராசிகள் இதிலிருந்து விடுபடுவார்கள். இதன் அடிப்படையில், அனைத்து ராசிகளிலும் சனி பெயர்ச்சியால் ஏற்படப்போகும் தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் வருமானம் எதிர்பாராத வகையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும். திடீர் செல்வம் சேரும் வாய்ப்பும் உண்டாகும். உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருந்த திட்டங்களை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது.
ரிஷபம்
நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி அல்லது வேலை செய்யும் பணியாளராக இருந்தாலும் சரி, இரண்டு துறைகளிலும் உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். உங்களின் தொழிலில் ஸ்திரத்தன்மை ஏற்படும் காலம் இது. உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும்.
மிதுனம்
உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். கடன் சுமை குறையும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, ஒருவித மன அழுத்தத்தை அனுபவிக்க நேரிடும். வேலை சம்பந்தமாக சில அழுத்தங்கள் ஏற்படலாம். ஆனால் உங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் விடுபடுவீர்கள். திடீரென்று பணம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும். உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் திறமை உங்களுக்கு வெற்றியைத் தரும். வேலை சம்பந்தமாக நீண்ட பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதிக வேலை மற்றும் கவனக்குறைவைத் தவிர்ப்பது உங்களுக்கு மிகவும் முக்கியம். இல்லையெனில் உடல்நலப் பிரச்சினைகள் சிக்கல்களை ஏற்படுத்தும்.
கன்னி
கடனை திருப்பி செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள். சனியின் இந்த நிலை உங்களுக்கு வேலைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலையில் நிபுணத்துவம் பெறுவீர்கள், மேலும் உங்கள் வேலையில் உங்கள் நிலை வலுப்பெறும்.
மேலும் படிக்க | Budhaditya Yogam: புதாதித்ய யோகம் தரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் லக்கி ராசிகள்
துலாம்
மாணவர்கள் படிப்பில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். ஆனால், சரியான கால அட்டவணையை உருவாக்கி தொடர்ந்து படித்தால், நல்ல வெற்றியை பெற முடியும். இந்த நேரம் திருமண வாழ்க்கைக்கு நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தை விட்டு வெளியே செல்ல நேரிடலாம். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கலாம்.
தனுசு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அவர்களால், உங்கள் பணித் துறையில் நீங்கள் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். உங்களின் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.
மகரம்
சனியின் பெயர்ச்சிக்குப் பிறகு, உங்கள் நிதி நிலை வலுப்பெறத் தொடங்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பு எதுவாக இருந்தாலும், இந்த காலகட்டத்தில் நீங்கள் அதற்கான சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கத் தொடங்கும்.
கும்பம்
உத்யோகத்தில் உங்கள் நிலை மேலோங்கும். உங்கள் ஆளுமை மேம்படும். நீங்கள் ஒரு வலுவான ஆளுமைக்கு சொந்தக்காரராக மாறுவீர்கள். நீங்கள் செய்யும் வேலையில் ஸ்திரத்தன்மை இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பணச் செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் நெருங்கியவர்களின் உடல் நலத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் அதிக அந்நியச் செலாவணி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. பல பயணங்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக இருக்கும் மற்றும் மன அழுத்தத்தை கொடுக்கலாம். எனினும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் அனைத்து அழுத்தங்களும் விலகி ஓடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ரிஷபத்தில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாயினால் பணத்தை அள்ளும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ