குரு வக்ர பெயர்ச்சி தாக்கம்.. இந்த ராசிகளுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்

கடந்த மே 1 ஆம் தேதி குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அடுத்த 2025 வரை இதே ராசியில் தான் பயணிப்பார். குரு ரிஷப ராசியில் இருந்து வெளியேறி 2025 ஆம் ஆண்டு மிதுன ராசியில் நுழைவார். அப்போது குரு வக்ர பெயர்ச்சி பல ராசிகளை பாதிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 14, 2024, 04:47 PM IST
  • சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளை பெறலாம்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • பண விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
குரு வக்ர பெயர்ச்சி தாக்கம்.. இந்த ராசிகளுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் title=

Guru Vakra Peyarchi: ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, எழுச்சி மற்றும் அஸ்தமனம்  மிகவும் சிறப்பு நிகழ்வாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ஏற்படும் இந்த மாற்றம் நாடு மற்றும் உலகத்தையும் பாதிக்கலாம். சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றும், அதேபோல் சில கிரகங்கள் வருடம் ஒருமுறை தனது ராசியை மற்றம். வேத ஜோதிடத்தில், குரு பகவான் நல்ல கிரகமாக கருதப்படுகிறது. அறிவு, மகிழ்ச்சி, கல்வி, திருமணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான குரு சுமார் 13 மாதங்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும். முன்னதாக இந்த ஆண்டு மே 01, 2024 முதல், குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். அடுத்த ஆண்டு 2025 வரை இதே ராசியில் தான் இருப்பார். அதன்பின்னர் குரு ரிஷப ராசியில் இருந்து வெளியேறி 2025 ஆம் ஆண்டு மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதன் பின்னர் வக்ர பெயர்ச்சி அடைந்து பல ராசிகளை பாதிக்கும்.

குரு வக்ர பெயர்ச்சி எப்போது நடக்கும்?
அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் காரணியான குரு, அக்டோபர் 9, 2024 அன்று காலை மிதுன ராசியில் வக்ர நிலையில் நகரத் தொடங்குவார். பின்னர் பிப்ரவரி 4, 2025க்கு அவை மீண்டும் வக்ர நிவர்த்தி அடைவார். குருவின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். இந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் வக்கர பெயர்ச்சி பலன் தரும்:

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 9, 2024 அன்று நடக்கப் போகும் குருவின் வக்ர பெயர்ச்சியால் நல்ல பலன்களை தர வாய்ப்புள்ளது. இந்த வக்ர பெயர்ச்சி மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் நடக்கவிருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கையின் சில நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். வருமானத்தில் உயர்வூ ஏற்படும். நிதி நிலை முன்பை விட முன்னேற்றத்துடன் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளை பெறலாம்.

மேலும் படிக்க | Saturn Transit: சனியின் வக்ர நிவர்த்தி.... கவலை வேண்டாம்... இனி எல்லாம் சுகமே..!!

கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். இந்த வக்ர பெயர்ச்சி பதினொன்றாவது வீட்டில் நடக்கப் போகிறது. இதை லாப ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலையில் நல்ல உயர்வைப் பெறலாம். நிதி ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் அடையும். கடனை திருப்பிப் பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி மிகப் பெரிய வரமாக அமையும். ஏனெனில் இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் நடக்கப் போகிறது. இதனால் தனுசு ராசிக்காரர்கள் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும். வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியிடத்தில் மரியாதை மற்றும் புகழையும் பெறுவீர்கள். பண விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Jagannath Rath Yatra: கடவுளின் கஜானாவை திறக்க பாம்பு பிடிப்பவர் ஏன்? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரி ஜெகந்நாதர் கருவூலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News