குரு பூர்ணிமா அன்று உருவாகும் ராஜ யோகம்; அதிர்ஷ்ட மழையின் நனையும் 3 ராசிகள்

Guru Purnima 2022: குரு என்றால் "இருளை அகற்றுபவர்" என்று பொருள். குரு என்பவர், நமது அறியாமையை நீக்கி, ஞானத்தையும் அறிவையும் பெற வழி செய்பவர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2022, 12:42 PM IST
  • குரு எனும் வார்த்தைக்கு "இருளை அகற்றுபவர்" என்று பொருள்.
  • 2022ம் ஆண்டு குரு பூர்ணிமாவில் 4 மிகவும் மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன.
  • குரு என்பவர், நமது அறியாமையை நீக்கி, ஞானத்தையும் அறிவையும் பெற வழி செய்பவர்
குரு பூர்ணிமா அன்று உருவாகும் ராஜ யோகம்; அதிர்ஷ்ட மழையின் நனையும் 3 ராசிகள் title=

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதமும் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது. 2022, ஜூலை 13ம் தேதி (புதன் கிழமை)தாவது நாளை குரு பூர்ணிமா கொண்டாடப்படும். குரு எனும் வார்த்தைக்கு "இருளை அகற்றுபவர்" என்று பொருள். குரு என்பவர், நமது அறியாமையை நீக்கி, ஞானத்தையும் அறிவையும் பெற வழி செய்பவர். நம் பாரம்பரியத்தில் குரு பௌர்ணமி அன்று, தேடுதலில் இருப்பவர்கள் தம் நன்றியை குருவிற்கு வெளிப்படுத்தி அவரிடம் ஆசி பெறுவார்கள்.

அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.

2022 ம் ஆண்டு குரு பூர்ணிமாவில் 4 மிகவும் மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அதிகப் பணமும், வேலையில் முன்னேற்றமும் அடைவார்கள்.

குரு பூர்ணிமா இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதோடு ஜோதிடத்தின் பார்வையில் இந்த ஆண்டு குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. குரு பூர்ணிமா அன்று, 4 ராஜயோகங்கள் உருவாகின்றன, இது 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடத்தை அள்ளிக் கொடுக்கும். பூர்ணிமா 2022 அன்று செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் சுப ஸ்தானத்தில் உள்ளன.

ஜூலை 13-ம் தேதி புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியில் அமர்கின்றன. இதனால், புத ஆதித்ய 4 யோகங்கள் புதன், சூரியன், சுக்கிரன் ஒரே ராசியில் இருந்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போவது நிச்சயம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம். இந்த யோகங்களினால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குரு பூர்ணிமா யோகம் மிகவும் சாதகமாக அமையும். பணம் சம்பாதிப்பார்கள். திடீரென்று எங்கிருந்தோ நிறைய பணம் கிடைக்கும். நீண்ட நாளாக கைக்கு வராத பணம், எதிர்பாராத வகையில் வந்து சேரும். வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கும். பேச்சு சாதுர்யத்தினால் பல காரியங்களை சாதிப்பீர்கள். அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கும் குரு பூர்ணிமா மிகவும் நன்மை தரும். பண விஷயத்தில் அதிக லாபம் அடைவார்கள். எங்கிருந்தோ பணம் கிடைப்பதைத் தவிர, வருமானத்திற்கு நிரந்தர உயர்வு இருக்கும். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் பெரிய அளவில் ஆர்டர்களைப் பெறலாம். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர நிலையில் நுழையும் புதன்; இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

கன்னி

2022-ம் ஆண்டு குரு பூர்ணிமாவில் உருவாகும் ராஜயோகம் கன்னி ராசியினருக்கு வரப்பிரசாதமாக அமையும். அவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையும் நடக்கலாம். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைக்கும். அது உங்கள் வியாபார வெற்றிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News