சுக்கிரனும் சனியும் சேர்ந்தால்? 4 ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்

Shani Shukra Gochar 2023: தீபாவளிக்கு முன்னதாக 2 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். சனி மற்றும் சுக்கிரன் சேர்ந்து கொடுக்கும் நல்ல பலன்களால் பலனடையும் ராசிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 8, 2023, 08:05 AM IST
  • அதிர்ஷ்டம் அள்ளும் 4 ராசிகள்
  • 4 ராசிகளுக்கு தான் உண்மையான தீபாவளி!
  • தீபாவளிக்கு முன்னரே அதிரடி நன்மைகளை பெறும் ராசிகள்
சுக்கிரனும் சனியும் சேர்ந்தால்? 4 ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும் title=

நவகிரகங்களில் முக்கியமான வலுவான கிரகங்களான, சுக்கிரன் மற்றும் சனியின் மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை. தற்போது சுக்கிரன் ராசி மாறியிருக்கும் நிலயில், சனியின் வக்ர  நேரடியாக மாறிவிட்டது. நவம்பர் மாதத்தில் தீபாவளிக்கு முன், சனி மற்றும் சுக்கிரனின் நிலையில் ஒரு பெரிய மாற்றம் மக்களின் தலைவிதியை மாற்றும்.

சுக்கிரன் மகிழ்ச்சி, ஆடம்பரம், செல்வம் மற்றும் செல்வத்தின் காரணி. அதேசமயம் சனி, நீதியின் கடவுள் கடின உழைப்பு, நியாயம் மற்றும் கடின உழைப்புக்கு காரணமானவர். இந்த இரு கிரகங்களின்சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது. தீபாவளிக்கு முன் யாருக்கு வாழ்க்கையில் வசந்தம் பிறக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் வந்து சேரும். பணியாளர்களின் வருமானம் கூடும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்: சுக்கிரன், சனியின் ஸ்தான மாற்றங்களினால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை பார்க்கலாம். கடின உழைப்பு என்றைக்குமே வீண் போகாது, நல்ல பலன் தரும். செல்வத்தை அள்ளித்தரும் சனி மற்றும் சுக்கிரனின் சஞ்சாரத்தால், வாழ்வில் செல்வ வளம் பெருகும். நீதிமன்றம் தொடர்பான முடிவுகள் சாதகமாக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

மேலும் படிக்க | Mercury Rise: விருச்சிகத்தில் உச்சமடையும் புதன்! கொட்டோ கொட்டுன்னு பணமழை கொட்டப்போகுது!

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தீபாவளியை கொண்டாட அருமையான காரணம் இருக்கிறது. சுக்கிரன், சனியின் ஆசியால் வாழ்க்கைத்தரம் மேம்படும். உங்கள் நிதி நிலை மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சில நல்ல செய்திகள் வந்து சேரும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனும் சனியும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பும் நேரம் இது. தீபாவளிக்கு முன்பே பம்பர் லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | அன்னை மகாலட்சுமியின் பிறந்தநாள்: தந்தேராஸ் நாளில் செய்ய வேண்டிய குபேர பூஜை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News