Mercury Rise: விருச்சிகத்தில் உச்சமடையும் புதன்! கொட்டோ கொட்டுன்னு பணமழை கொட்டப்போகுது!

Budh Rise After Diwali: புதன் உச்சம் பெறுவதால் மகிழப்போகும் ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா? தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து புதன் அபரிமிதமான பணத்தைத் தருவார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2023, 11:43 AM IST
  • நவம்பர் 13இல் விருச்சிகத்தில் உச்சமடையும் புதன்
  • தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து பண வரத்து அதிகரிக்கும்
  • நிம்மதியாய் வாழப்போகும் ராசிகள்
Mercury Rise: விருச்சிகத்தில் உச்சமடையும் புதன்! கொட்டோ கொட்டுன்னு பணமழை கொட்டப்போகுது! title=

விருச்சிகத்தில் புதன் உதயம் 2023: புதனின் உதயம் மக்களின் தொழில் மற்றும் நிதி நிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது. தீபாவளி மாதம் தொடங்கியது. பண்டிகைகள் மற்றும் மதம் தவிர, ஜோதிடத்தின் கோணத்தில் இருந்தும் இந்த மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீபாவளிக்கு முன் சுக்கிரன், சனி போன்ற முக்கியமான கிரகங்கள் சஞ்சாரம் நிகழ்ந்த நிலையில் வரும் தீபாவளி இது.

மக்கள் அனைவரும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடிய பிறகு அதற்கு மறுநாள், செல்வம், வியாபாரம், பேச்சு, புத்திசாலித்தனம், வாத விவாதங்கள் என அனைத்தையும் கொடுக்கும் புதன் உதயம் ஆகிறார்.  தீபாவளி ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2023 அன்று கொண்டாடப்படும், அடுத்த நாள் 13 நவம்பர் 2023 அன்று, புதன் விருச்சிக ராசியில் உச்சம் பெறுவது அனைத்து ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சஞ்சாரம் செய்துள்ள நிலையில் அவர் அங்கு உச்சம் பெறுவது என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான் அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்கும் புதன் உச்ச பெறுவது 3 ராசிகளுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.

மேலும் படிக்க | சனியின் பெரிய மாற்றம்: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... நல்ல காலம் ஆரம்பம்

புதன் உச்சம் பெறுவதால் மகிழப்போகும் ராசிகள் 

கன்னி: புதன் உச்சம் பெறுவது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடப் பிறந்தவர்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். தொழிலில் பெரிய அளவு வெற்றியைப் பெறலாம். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். தைரியமும் ஆற்றலும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். மிகவும் திருப்தியாக இருக்கும் உணர்வு ஏற்படும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்: விருச்சிகத்திலேயே ராசியில் புதன் சஞ்சரிப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் உச்சம் அடைவது, ஆளுமையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.  புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் சில நல்ல முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள். இந்த முடிவுகள் உங்களுக்கு பயனளிக்கும். உத்தியோகம், தொழில், ஆலோசகர்கள் என அனைவருக்கும் நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும் காலம் இது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.  

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு புதன் உச்சமடைவதால் பணமழை பொழியும் என்று சொல்லலாம். வருமானம் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து பணம் வரும். புதிய வருமான ஆதாரங்களை உருவாகி, உங்களுடைய அனைத்து நிதி பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்பதால், இந்த தீபாவளி உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உள்ளதாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். அபாயகரமான முதலீடு கூட நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனீஸ்வரரின் நேர் பார்வையில் தத்தளிக்கும் 5 ராசிகள்! வேற வழியில்ல 235 நாள் பொறுத்துக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News