சுக்கிரன் ராசி பரிவர்த்தனை 2022: ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் செல்வம், அதிர்ஷ்டம், அழகு, வளமை மற்றும் வசதிகளின் காரணியாகக் கருதப்படுகிறது. ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் ரிஷபம் ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழைகிறார்.
ஜூலை 13 ஆம் தேதி காலை 10.50 மணிக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நடக்கிறது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை சுக்கிரன் மிதுன ராசியில் இருப்பார். சுக்கிரனின் மாற்றங்கள் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாகவும், உச்சமாகவும் இருந்தால், அவர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார். சுக்கிரன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் மாற்றத்தால் வேலையில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகள் கூட்டுப் பணிகளில் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் நிம்மதி கிடைக்கும்.
மேலும் படிக்க | ஜூலையில் 5 கிரகங்களின் ராசி மாற்றம், இந்த 4 ராசிகளுக்கு பிரச்சனை
துலாம்:
சுக்கிரனின் ராசி மாற்றம் துலா ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். சுக்கிரனின் செல்வாக்கின் காரணமாக, இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வலுவான லாப வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால், வருமானத்தில் உயர்வைப் பெறலாம். வியாபாரிகள் லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறலாம்.
தனுசு:
சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், நீங்கள் வேலையில் பதவி உயர்வுடன் வருமான உயர்வையும் பெறுவீற்கள். உங்கள் பணியில் மேலதிகாரி மகிழ்ச்சி அடைவார். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருளால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பணி செய்யும் பாணி மேம்படும். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
இந்த நேரத்தில் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் சாதகமான நன்மைகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவையும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR