மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை மீன ராசிக்காரரே: ஜாலியாக வாழலாம் சிம்ம ராசியினரே

Astro Predictions For July 31: ஜூலை மாதம் கடைசி நாளான இன்று ஞாயிற்றுக் கிழமை. இன்றைய ராசிகள் எதுபோன்ற பலன்களை கொடுக்கிறது? ரிஷபமும் சிம்மமும் நிம்மதியாக இருப்பார்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2022, 06:34 AM IST
  • மேஷ ராசிக்கார்ரகளுக்கு நல்ல நாள்
  • மீன ராசியினருக்கு நல்ல செய்தி வந்து சேரும்
  • அமைதியாக இருக்க வேண்டியது தனுசு ராசியினருக்கு அவசியம்
மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை மீன ராசிக்காரரே: ஜாலியாக வாழலாம் சிம்ம ராசியினரே title=

புதுடெல்லி: ஜூலை 31ம் தேதியான இன்று உங்கள் அதிர்ஷ்டத்தை தெரிந்துக் கொள்ளலாம். 12 ராசிகளுக்குமான பலன்கள் வெவ்வேறாக இருந்தாலும், மேஷ ராசிக்காரக்ள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் இன்று உங்களைத் தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் நுழைபவர் உங்களை நோக்கி தூய்மையான நோக்கங்களைக் கொண்டிருப்பதால் இது இன்று கவலைக்குரிய விஷயமாக இருக்காது. என்பதால் இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். அதேபோல, ரிஷப ராசிக்காரர்களின் மனதில் தோன்றும் எண்ணங்கள் மிகப்பெரிய உந்துதல் கொடுப்பதாக இருக்கும். சிறிய இலக்குகளை மறந்துவிட்டு, மிகப்பெரிய இலக்கை நோக்கி சிந்திப்பதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும் நாள் இன்று.  

மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான செயல்பாடுகளைக் கொண்டுவரப் போகும் நாள் இன்று. வேலை, அன்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான அனைத்து அம்சங்களிலும் நீங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை வைத்துக்கொள்ள மறக்காதீர்கள். உங்கள் மனதை முழுமையாக ஒரு விஷயத்தில் ஈடுபடுத்தினால் வெற்றி நிச்சயம்.  

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிலை வலுவானதாக இருக்கும். இன்று நீங்கள் விரும்பிய எதையும் பெறலாம். நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக எதையாவது கையாண்டிருந்தால், இறுதியாக இன்று நீங்கள் அதைச் சமாளிக்கப் போகிறீர்கள். உங்கள் பலத்தை சித்தரிப்பதற்கும் உங்கள் குடும்பம் அல்லது உறவின் தூணாக இருப்பதற்கும் இது ஒரு நல்ல நாள். மற்றவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பது போல், நீங்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாத ராசிபலன்: உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?

சிம்ம ராசிக்காரர்கள் இன்று விளையாட்டுத்தனமாகவும் நல்ல மனநிலையுடனும் இருப்பீர்கள். இந்த உணர்வைப் பயன்படுத்தவும், வெளியே செல்லவும், உங்கள் நாளை அனுபவித்து மகிழுங்கள். உங்கள் நேர்மறைத் தன்மை உங்களைச் சுற்றிப் பரவி, மற்றவர்களிடம் ஆக்கப்பூர்வமான ஆற்றலை உருவாக்கும். 

கன்னி ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவசரப்படுவதற்குப் பதிலாக, நிதானமாக செயல்படவும். இது உங்களை அமைதிப்படுத்தும் மற்றும் உங்கள் மனதை தெளிவுபடுத்த உதவும். துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாள். தொட்டதெல்லாம் பொன்னாகும்.  

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களை வெளிப்படுத்துவதில் திறமையுடன் செயல்படவேண்டும். உங்கள் காதல் உணர்வுகளை உங்கள் குடும்பத்திலோ அல்லது இணையுடனோ பேசுவது அவசியம். அது நிம்மதியைக் கொடுக்கும்.  

தனுசு ராசிக்காரர்கள் இன்று அமைதியாக நிதானமாக இருப்பது நன்று. புதிய விஷயங்களில் ஈடுபடுவதற்கு உகந்த நாள் அல்ல. வாழ்க்கையில் அமைதி என்பது அவசியமானது. அதற்கான முயற்சிகளை எடுக்கவும். மகர ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பது பாதகமாக இருக்கும். உணர்வுகளை உங்களுக்குள் வைத்திருப்பது உதவப் போவதில்லை. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி ஒருவரிடம் பேச முயற்சிக்கவும். இது உங்களை அமைதிப்படுத்தும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான சூழ்நிலை அவசியம். மனதில் தோன்றும் அனைத்தையும் அனைவருடனும் பகிர்ந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நிதானம் காக்க வேண்டிய நாள் இன்று. மீன ராசிக் காரர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்திகள் தேடி வரும். இது உங்கள் மனநிலையை முற்றிலும் மாற்றும். இதற்கு தயாராக இருங்கள், இந்த நாள் உங்களுக்கான நாள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குருவின் அருளால் அடுத்த 120 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News