சனி உச்சம்.. பணம், புகழ், அதிர்ஷ்டம்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்

Sani Vakra Nivarthi, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும் உள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 29, 2024, 05:18 PM IST
  • நவம்பர் 15 ஆம் தேதி கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி.
  • பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
  • சனி வக்ர நிவர்த்தியால் சுப பலன்கள் கிடைக்கும்.
சனி உச்சம்.. பணம், புகழ், அதிர்ஷ்டம்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும் title=

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும் மிக முக்கியமான கிரகமாகவும் கருதப்படுகிறது. இவரது அனைத்து வித மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். சமீபத்தில் அவர் நட்சத்திர பெயர்ச்சி அடைந்தார். மேலும் கடந்த ஜூன் 30 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு பிறகு சனி தனது போக்கை மாற்றி வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது வருகிற நவம்பர் 15 ஆம் தேதி நிகழப் போகிறது. மேலும் சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எனவே அந்த ராசிகளை (Zodiac Sign) பற்றி இங்கே காணலாம். 

சனி வக்ர நிவர்த்தி எப்போது?
வருகிற நவம்பர் 15 ஆம் தேதி இரவு 08:07 மணிக்கு கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார்.

மேலும் படிக்க | 2024 ஆகஸ்ட் மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? சிம்மத்துக்கு சூப்பர் துலாமுக்கு சுமார், உங்களுக்கு?

1. மிதுனம் (Gemini)- மிதுன ராசிக்காரர்கள் சனி வக்ர நிவர்த்தியால் பல நன்மைகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். சிக்கி இருந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சிஜான் செய்தி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் பல வித முன்னேற்றங்கள் ஏற்படும். 

2. விருச்சிகம் (Scorpio)- விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியால் சுப பலன்கள் கிடைக்கும். பல்வேறும் சுகங்களும், வசதிகளும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி ஆதாயம் உண்டாகும். சட்ட சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 

3. கும்பம் (Aquarius)- கும்ப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியால் நன்மை தரும். குறிப்பாக நிதி பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனைவியின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். நிதி ஆதாயம் உண்டாகும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும். அனைத்து முயறிசிகளிலும் வெற்றி காண்பீர்கள். 

மேலும் படிக்க | குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம், அரச பொற்காலம்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News