சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... வாழ்வில் ஏற்றம்

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2024, 01:44 PM IST
  • ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித் தரும்.
  • நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும்.
  • குடும்பத்தில் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... வாழ்வில் ஏற்றம் title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசியைத் தவிர கிரகங்களில் அவ்வப்போது நட்சத்திரங்கள், உதய, அஸ்தமான நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. இவற்றால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மே மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். மே 19, 2024 அன்று, சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 08:51 மணிக்கு சுக்கிரன் ரிஷபம் ராசிக்குள் நுழைவார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். பல வெற்றிகள் உங்களை வந்து சேரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

சிம்மம் (Leo)

ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். வங்கிகள் அல்லது  தனி நபர்களிடம் ஏதாவது கடன் வாங்கி இருந்தால், அதை இப்போது திருப்பி செலுத்துவீர்கள். இதற்குப் பிறகு, உங்கள் நிதி நிலைமை நாளுக்கு நாள் மேம்படும். குடும்பத்தில் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!

கும்பம் (Aquarius)

நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் தவித்துக்கொண்டு இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகளையும் பெறலாம், இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வரலாம். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். 

விருச்சிகம் (Scorpio)

சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். சுக்கிரன் அருளால் குடும்பத்தில் அதிகப்படியான மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். இப்போது முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிச்சயம் ஆகும். இந்த காலத்தில் அன்னை லட்சுமியின் அருள் கிடைப்பதால் பொருளாதார சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News