புதன் வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகத்துக்கு என முக்கியமான இடம் உண்டு. ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை தீர்மானிப்பது புதன் கிரகம் என்று ஜோதிடம் சொல்கிறது. பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 10-ம் தேதி கன்னி ராசியில் இருந்து புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிக்காரர்களின் தலை விதி மாறும். புதன் பகவான் செப்டம்பர் 10 ஆம் தேதி பிற்போக்காக நகர்கிறார். இது, இந்த ராசிக்காரர்களுக்கு வேதனையான அனுபவங்களைக் கொடுக்கும். புதன் கிரகத்தின் பிற்போக்கு பயணத்தின் விளைவு பலருக்கு பாதகமாக இருக்கும். பிற்போக்காக நகரும் புதனின் தாக்கத்தின்காரணமாக, சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
புதன் கிரகம், 2022 ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமை முதல் அதன் சொந்த ராசியான கன்னி ராசியில் இருக்கிறது. இப்போது செப்டம்பர் 10 ஆம் தேதி, அது அதே ராசியில் பின்னோக்கி சென்று வக்ர கதியில் சிம்ம ராசிக்குக் பெயர்ச்சியாகிறது. அக்டோபர் 2 ஆம் தேதி மீண்டும் நகரும். இதன் பிறகு அக்டோபர் 26-ம் தேதி துலாம் ராசிக்குள் நுழையும். அனைத்து 12 ராசிகளிலும் பிற்போக்கு புதனின் தாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
செப்டம்பர் 10 ஆம் தேதி புதன் பிற்போக்காகப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு அசுபமான பலன்களைக் கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவை...
மேஷம்: புதன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பிற்போக்குத்தனமாக சஞ்சரிப்பார். புதனின் தாக்கத்தினால் உங்களுக்கு , எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு ஏற்ற காலம் இது என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது எப்போதும் நல்லது.
ரிஷபம்: உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பது கலவையான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உறவுமுறைகள் மேம்படும். பணத்தை முதலீடு செய்ய நேரம் சிறப்பாக இருக்கும். ஆனால் முதலீடுகள் காலை வாரிவிடும் சங்கடமும் தொடர்வதால் கவனமாக இருக்கவும்.
மேலும் படிக்க | பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!
மிதுனம்: பிற்போக்கான புதன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சுபமாக இருப்பார். இந்த காலகட்டத்தில் உங்கள் வசதிகள் அதிகரிக்கும். இருப்பினும் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாய்க்கட்டுப்பாடு என்றும் நிம்மதியைத் தரும் என்ற தாரக மந்திரத்தை மறந்துவிட வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கன்னி ராசியில் வக்ரமடையும் புதன்; இந்த '6' ராசிகளின் தலைவிதி மாறும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ