கடக ராசியை பாடாய் படுத்தும் அஷ்டம சனி: ஜூலை 13ல் இருந்து நிம்மதி பெருமூச்சு விடலாம்

சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் இருக்கும் நிலையில், ஜூலை 12, 2022 அன்று, மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது சில ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 27, 2022, 10:51 PM IST
  • கும்பத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சனியின் அதிசார பெயர்ச்சி முடிவுக்கு வருகிறது
  • அஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட கடக ராசிக்கு ஆசுவாசம்
  • ஜூலை 13ம் தேதியில் இருந்து ஆக்கப்பூர்வமான மாற்றம்
கடக ராசியை பாடாய் படுத்தும் அஷ்டம சனி: ஜூலை 13ல் இருந்து நிம்மதி பெருமூச்சு விடலாம் title=

கும்பத்தில் சனி ஆட்சியில் இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் சனீஸ்வரர் பெயர்ச்சியாகவிருக்கிறார். அஷ்டம சனியின் அதிசார பெயர்ச்சி முடிவுக்கு வருகிறது இனி நிம்மதியாக இருக்கலாம் என்று ஆசுவசப்படும் ராசிகளில் கடக ராசி முதலிடத்தில் இருக்கிறது.

2022 ஏப்ரல் 29ம் தேதியன்று மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியான சனீஸ்வரர் கும்பத்தில் ஆட்சியில் இருக்கிறார். இதனால் கடகத்திற்கு அஷ்டம சனி ஏற்பட்டுள்ளது.

பொதுவாக அஷ்டம சனி காலத்தில் ஆசைகளை அதிகரித்து அதனால் சிக்கல்களை ஏற்படுத்தி கஷ்டத்தைக் கொடுத்த சனீஸ்வரரின் அஷ்டம ஸ்தானம் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே உங்களுக்கு பிரச்சனையைக் கொடுக்கும்.

சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் இருக்கும் நிலையில், ஜூலை 12, 2022 அன்று, மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது சில ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

மேலும் படிக்க | ஏழைரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

கடக ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில், அஷம ஸ்தானாதிபதி சனியே ஆட்சி பெற்று, மூலதிரிகோண வலிமையைப் பெற்றிருப்பதால் நற்பலன்கள் இல்லாமல் சோம்பிக் கிடந்த கடக ராசியினர் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம்.   

தொழில், உத்தியோகம் செய்பவர்களுக்கு இருந்த சிரமங்களும் நீங்கும் காலம் இது. மன வருத்தம் தரக்கூடிய நிலை எப்போது மாறுமோ என்ற உங்கள் ஆதங்கம் இன்னும் இரு வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும். 

வாயைத் திறந்தால், குடும்பத்திலேயே நிலைமை சரியில்லையே என்று கவலைப்பட்ட நேரம் மாறி நிம்மதியான சூழல் உருவாகும். கடக ராசி அதிபதியான சந்திரனுக்கு அசுபராக சனீஸ்வரர் இருப்பதால், உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கும் இனி முற்றுப்புள்ளி விழுந்துவிடும்.  

மேலும் படிக்க | சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்கள்: இதை கண்டிப்பாக செய்ய வேண்டாம்

இருப்பினும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை அஷ்டம சனி உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதுவரை தட்டிப் போன சுபகாரியங்கள் கூடிவரும்.  

குல தெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையைத் தரும். பிரதோஷ வழிபாடு, அனுமன் வழிபாடு செய்வது நல்லது. அதுமட்டுமல்ல, சனியின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கும் நிம்மதியைக் கொடுக்கும்.

தன்னம்பிக்கையை அதிகரித்து, வெற்றிகளைக் கொடுத்து, நிதி நிலையை மேம்படுத்தி கௌரவத்தையும் பெற்றுக் கொடுக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News