சமசப்தக யோகத்தினால் ஆகஸ்ட் 17 வரை இந்த ‘4’ ராசிகளுக்கு போதாத காலம் தான்!

சம்சப்த யோகம் தோஷ பலன்:  எதிரியாக உள்ள கிரகங்கள் நேருக்கு நேர் பார்க்கும் போது ஏற்படும் தோஷத்தினால், சில ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2022, 05:00 PM IST
  • சூரியன் - சனி இணவினால் ஏற்படும் அசுப யோகம்.
  • சனி மற்றும் சூரியன் நேருக்கு நேர் பார்க்கும் போது சமசப்தக யோகம் உருவாகிறது.
  • வேலையை விட்டு விலகும் சூழ்நிலை வரலாம்.
சமசப்தக யோகத்தினால் ஆகஸ்ட் 17 வரை இந்த  ‘4’ ராசிகளுக்கு போதாத காலம் தான்! title=

சம்சப்த யோகம் தோஷ பலன்: ஜூலை 16ல் சூரியன் கடக ராசியில் பிரவேசித்து சூரியனின் எதிரி கிரகமான சனி மகர ராசியில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த இரண்டு கிரகங்களும் பரஸ்பரம் எதிரே இருப்பதால் சமசப்தக யோகம் உருவாகிறது. தந்தை மற்றும் மகனாக இருக்கும் நிலையிலும், இந்த கிரகங்கள் எதிரி கிரகங்களாக உள்ளன. சனி மற்றும் சூரியன் நேருக்கு நேர் சந்திப்பதால் ஏற்படும் இந்த அசுப யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

சனி - சூரியன் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களும்  மிகவும் எச்சரிக்கையாக இருக்க  வேண்டும். சனி மற்றும் சூரியன் நேருக்கு நேர் பார்க்கும் போது சமசப்தக் யோகம் உருவாகிறது என  ஜோதிட சாஸ்திரத்தில் கூறபட்டுள்ளது. இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த சம்சப்தக் யோகம் கெட்ட நேரமாக அமையும். இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 17 வரை கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிகளில் மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ஆகியவை அடங்கும். சூரியன் சிம்மத்தை ஆளும் கிரகம் என்றும், கும்பத்தை ஆளும் கிரகம் சனி என்பதும் குறிப்பிடத்தக்கது.  எனவே இது இந்த ராசிக்காரர்களை பெரிதும் பாதிக்கும்.

மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்

சூரியன் - சனி  இணவினால் ஏற்படும் அசுப யோகத்தால் மேலே கூறிய ராசிக்காரர்கள் பல விஷயங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில், பல பெரிய ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படலாம். எனவே, நன்றாக சிந்தித்து, புத்திசாலித்தனமான முடிவை எடுங்கள்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் எதேனும் ஒரு விஷயத்தில் வாக்குவாதம் வரலாம். வேலையை விட்டு விலகும் சூழ்நிலை வரலாம். எனவே, இந்த நேரத்தில் உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். உங்கள் சொந்த தொழிலில் ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுவது நல்லது.

சமசப்தக யோக காலகட்டத்தில் பண இழப்பையும் சந்திக்க நேரிடும். முதலீட்டில் நஷ்டம் வரலாம். அதே நேரத்தில், எந்த நாட்பட்ட நோய்களும் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே உங்கள் உடல் நலத்தில் கவனமாக இருங்கள்.

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News