Sani Nakshatra Peyarchi In Poorattathi: ஜோதிடத்தின் படி, சனி மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது, ஏனெனில் சனியின் தாக்கம் பெரிய விளைவை ஏற்படுத்தக் கூடும். அதனுடன் சனி மிக மெதுவாக நகர்வதால், சனியின் தாக்கம் மிக நீண்ட காலம் வரை நீடிக்கும் என்பார்கள். அதன் படி வரும் 18 ஆகஸ்ட் 2024 அன்று சனி கிரகம் மிகப் பெரிய மாற்றத்தை நிகழ்தப் போகிறார். சனி தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணிக்கிறது, தற்போது ஆகஸ்ட் 18 ஆம் தேதி, முதல் பாதத்தில் பெயர்ச்சி அடையும் சனி. சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும் ஆனால் மூன்று ராசிக்காரர்களுக்கு சனியால் கஷ்டம், பண அழிவு ஏற்படும்.
சனியால் பிரச்சனை வரலாம்
பூணூல் ஆவணி அவிட்டம் பண்டிகைக்கு முன்னதாக சனியின் நட்சத்திர மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு புயல் போல் பிரச்சனைகள் வரும். இந்த ராசி நபர்களுக்கு நிதி இழப்பு, வாகன விபத்து மற்றும் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேஷம் (Aries Zodiac Sign)- சனியின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக இநடஜ ராசிக்காரர்களுக்கு பெரும் அளவில் நிதி இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது. கடன் வாங்க வேண்டிய சூழல் நிலவும். செலவுகளும் அதிகமாகலாம். பணியிடத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். முதலீடு செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கடகம் (Cancer Zodiac Sign)- சனியின் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை தரக்கூடும். வீட்டுல் அமைதியின்மை ஏற்படும். இந்த நேரத்தை நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருக்க வேடனும். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வீட்டில் பண இழப்பு, சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
கும்பம் (Aquarius Zodiac Sign)- சனியின் நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் சிரமங்களை தரும். பழைய நோய் மீண்டும் உங்களை தொந்தரவு செய்யலாம். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கும் உடல்நலப் பிரச்சனை ஏற்படலாம். பண இழப்பு மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படும், இதனால் சரியாக பட்ஜெட்டை உருவாக்கி செலவிடவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ